வலி
-------
மெல்லிய தென்றலும்,சின்னத் தூரலுமாகசிலிர்க்க வைக்கும் கவிதைகளை...
உணர்வுகளை உலுக்கியெடுக்கும் கவிதைகளை ,
உளத்தை வென்றெடுக்கும் உன்னத கவிதைகளை,
ரசிக்கும் போது ,எண்ணத்தோன்றுகிறது ..
உள்ளத்தையும் உடுருவும் அற்புதமானவை இவை என்று, வாசகனாய்....
கவிஞ்னாய் மாறும்போதுதான் ,
நிச்சயம் கவிதைப் பிரசவமும் ,
கற்களைச் செதுக்கி, சிற்பம் வடிப்பது போன்று .
வலிமிகுந்ததுதானென்று....
No comments:
Post a Comment