துயரமா கஇருந்தது ,
கோபமாக்கியது ,
மகிழ்ச்சியைக்கொடுத்தது எல்லாமுமே ,
இன்று மாறிப்போய்....
சலனமற்று, கடந்துபோயிருந்தது ,
முன்று நாட்களுக்கு முன்பு -
சூழ்ந்திருந்த வங்கக் கடல் புயல் போல் .
வரிக்குதிரையின் கணக்கிலடங்காத
வரிகளைப்போல ...
புதிய நாளான இன்று புதிதாய் நான்..
எதிர்பார்ப்புகளுடனும்,
கண்ணுக்குதெரியாத
புதிய சில வடுக்களுடன் ....
எப்பொழுதும்போல் ..!
2 comments:
மனித மனத்தின் உணர்வுகள் தோண்டத்தோண்ட எண்ணற்ற செய்திகளை நமக்குக் கொடுக்கும் ஒரு அற்புதச்சுரங்கம்.இக்கணத்தில் மாபெரும் மலையாய் விஸ்வரூபமேடுக்கும் உணர்வுகள் பின்னர் வடுக்களாகி நினைவுப்பள்ளத்தில் தேங்கிப்போவதை கவிதையாக்குவதில் வெற்றி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.இன்றைய காலைபோழுது ஒரு நாலா கவிதையுடன் தொடங்குகிறது.
தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி
Post a Comment