இன்னொரு தேர்தல்
---------------------------------
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும்,நகரங்களிலும்,பெருநகரங்களிலும்,சாலை குண்டும் குழியுமாக பல பத்தாண்டுகளாக விடியலுக்காக ஏங்கிகொட்டுருக்கின்றன, தமிழ் மக்கள் மழைகாலங்களில் எருமைகள் போலவும்,சாலைகள் குட்டைகளைப்போலவும் இருக்கின்றன , மழையற்ற வெயில் காலங்களில் கழுதைகளைப் போல சகிப்புத்தன்மை வாய்ந்தவர்களாக ,வாழ்வை பொதி போல சுமந்து பழகி, திரிந்து கொண்டிருக்கிறார்கள், மீதமுள்ள "குடிமக்கள் "தெருவோரங்களில் சாய்ந்தி கிடக்கிறார்கள்,போதை தெளிந்தவுடன் மீதம் இருக்கும் கால் காசை வீட்டிற்க் கொண்டு போக, மக்கள் கோரிக்கைகளுக்காக யாராவது போராடினால் நாயைப்போல அடிக்கப்படுகிறார்கள்,இவர்களை அடிக்கும் மாபாதகர்களோ காஞ்சி போட்ட உடுப்போடு, இவர்கள் நமக்காகவும் தான் போராடுகிறார்கள் என்ற எவ்வித பிரஞ்சையுமின்றி பிணங்கள் போல விறைப்பாக திரிய பழகிப் போய்,காவலாய் வளம் வருகிறார்கள் , தமிழ்நாடு இன்னொரு தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது...,மனமுடிததவடன்அடுத்தநாள் , தாலியறுக்கும் அரவான் திருவிழா தான் ஞாபகத்துக்கு வருகிறது....