Friday, May 30, 2014

நூல்களுடன் எனது நாட்கள்..!

நூல்களுடன் எனது நாட்கள்..! 
***************************
என்னுடைய படுக்கையிலும், பக்கத்திளுமிருக்கின்றன ...
அரை வாசிப்பிளிருக்கும் புத்தகங்கள்..!
படிக்க தூண்டும் அத்தனை புத்தகங்களையும், 
வாங்கிவிடும் மனதும்,வசதியும் வந்துவிட்ட பிறகு 
தொட்டுத்தடவினாலே அசதிவந்துவிடுகிறது...
எதார்த்த வாழ்க்கையின், பதார்த்தமாகிப் போனதால்.. 
வயோதிக மன்னனின் அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்ட 
புதிய இளம் பெண் போல விழித்துக் கொண்டிருக்கின்றன
என் புத்தகங்கள் ...வாசிப்பவனுக்காக..!

--சேகு--

Sunday, May 25, 2014

கோச்சடியான் -குறைப்பிரசவம் :பிழைத்துக்கொண்டால் நலம்!



கோச்சடியான் -குறைப்பிரசவம்
---------------------------------------------------
கதை பரவாயில்லை ...
ரஜனி vs தொழில் நுட்ப அனிமேசன் ரஜினி -பாஸ் மார்க் ! அழகாக இருக்கிறார் ,ஆனால் அனிரூத் ரேஞ்சிற்கு பல இடங்களில் ஒல்லி!
கிராபிக் நாசர் பரவாயில்லை !
கிராபிக் நாகேஷ் பரவாயில்லை !
கிராபிக் தீபிகா படுகோன் - படு கோணலாக ,குட்டையாக ,உயிரோட்டம் குறைவாக ...
மோசன் கிராபிக் சில இடங்களில் நன்றாகவும்,பல இடங்களில் படு சாதாரணமாகவும் இருக்கிறது !
மற்ற கதா பாத்திரங்கள் ,படு சுமாராய்..., படுத்தி எடுக்கின்றன அதிலும் சரத்,ஆதி,சோபனா,பொம்மலாட்டம் நாயகி, எல்லோரும் பார்க்க பரிதாபம்..!
சண்டைக் காட்சிகளும்,பாடல் காட்ச்சி அமைப்புகளும் நன்றாக வந்திருப்பது ஆறுதல் ! வேகமான கதை(ரவிகுமார்),இசைப்புயலின் இசை,ரஜனி,நாசர் பாத்திரங்களின் அமைப்பு,குரல் ஆகியவை , படத்தை தாங்கிப்பிடிக்கிறது.
அனைத்தையும் மீறி ,மோசன் கிராபிக் துவக்கப்புள்ளியாக சொவ்ந்தர்யாவைப் பாராட்டலாம் . !
இன்னமும் மெனக்கெட்டிருந்தால் நன்றாக வந்திருக்க வேண்டிய படம்!
வண்ணத்தூரிகையில் வந்திருக்கும் சின்ன கிறுக்கல்!
இன்குபேட்டரில் உள்ள இந்த குறைப்பிரசவ குழந்தை பிழைத்துக்கொண்டால் நலம்!

Wednesday, May 21, 2014

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !?

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !? ---------------------------------------------------------------------- பிரதமராக கோடான கோடி வாக்குகள்,கோடான கோடி செலவினங்கள்,ஸ்பான்சர்கள் மூலமாக மோடி வென்றுவிட்டார்.மக்கள் பலத்தால் வென்றவரை வாழ்த்துவது மரபு.,என்வே சில, பல தயக்கங்களைமீறி வாழ்த்துவோம் ! புதிய அரசை குறைந்தது 100 நாட்கள் கழித்து விமர்சிப்பதே ஞாயமாக இருக்கும்.!ஆனால் வெற்றிக்காக இவர்கடந்துவந்த பாதை,கொள்கைகளை ஒரு பறவைப்பார்வை பார்க்கலாம். பாராளுமன்ற பி.ஜே.பி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி 125 கோடி மக்களுக்காக பாடுபடுவேன் என்று சொல்லியபோது மகிழ்ச்சியாக இருந்தது,.ஆனால் பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பல வித மாக விதமுரண்பாடி, பெரும்பான்மை மக்களுக்கு ,சிறுபான்மை இஸ்லாமிய,கிருத்துவ மக்கள் அச்சுறுத்தலாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துவதில் கொள்கையாகவும்,குறியாகவும் இருந்தன.ஆனால் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வயிருவீங்கிய ,உடல் சிறுத்த சத்தற்ற உயிரனத்திற்கு ஒப்பாகவே இருக்கிறார்கள் . .உயர் கல்வியில் ,வேலை வாய்ப்பில் அரசின் அத்துணை துறைகளிலும் 5 சதவீதத்துக்கு கீழே இருக்கக்கூடிய இந்த சவலைப் பிள்ளையை ,பூச்சான்டியாய் சித்தரிப்பதில், சித்தாந்தப் பெருமை கொள்ளும் சங்க பரிவார் பெற்றெடுத்த முத்து தான் மோடி.தனது மண்ணைக் கூட முத்தமிடும் இவரிடம் சிறுபான்மை மக்களைப் பற்றிய ஆறுதலான ஒரு வார்த்தை , தவறிககூட வெளிவரவில்லையே !. நிச்சயமாக இந்திய மக்கள் மதவாதப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களில்லை ! ஏனெனில் இதுவரை இந்திய வரலாற்றில் ,மதவாதக் கட்ச்சிகள் பெரும்பான்மை பலம் பெற்றதே இல்லை.!பின் இந்த முறை என்ன நடந்துள்ளது?செல்லரித்துப் போன காங்கிரசின் வேதனை தரும் ஆட்சியிலிருந்து காப்பாற்றும் முகமாக இந்த காவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்! .,இவருடைய முந்தைய வரலாறுகளைகே கூட புறம்தள்ளி ..! இதில் ஸ்பான்சர்களின்(பெரு முதலாளிகள்,அவர்களின் மீடியா பங்காளிகள் ) பங்கு முக்கியமானது..பெருமுதலாளிகளுக்கு வேரு கவலை!? குறைந்த விலையில்,குறைந்த வரியில் தங்களுடைய அகோர பசிக்கு காங்கிரஸ் தந்து கிழ டாகிப்போனதால்,சவாரிக்கு புது குதிரை வேண்டுமே! இந்நிலையில் பிரதமர் மோடி வறுமை இந்தியர்கள்,தலித்துகள்,சிறுபான்மை மக்கள் ,என கையறு நிலையில் இருக்கும் திரௌபதி களை காப்பாற்றும் கண்ணபிரானா? துகிலுரியப்பட்ட போது நெடுமரமாக நின்ற பீஷ்மாச்சாரியாரா? வரும் ஐந்தாண்டுகள் முடிவுசெய்யும்!