Sunday, April 15, 2007

மீன்காரத் தெரு நாவல்- ஜாகீர்ராஜா

இஸ்லாமிய சமூகத்தினரைப் பற்றிய படைப்புகள் அச்சமூகம் சார்ந்த படைப்பாளிகளிடமும்பிற படைப்பாளிகளிடமும் பல வந்துள்ளன. இவர்களுள் உள்ள ஏற்ற தாழ்வு குறித்தும் ,ஏழைமக்களுடைய வாழ்க்கை குறித்ததும் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பžர், இங்குள்ளதோப்பில் முகம்மது மீரான் ஆகியோருடைய படைப்புகளும் ,சமீபத்திய பெண் எழுத்தாளர் சல்மா வரைபல தளங்களில் படைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றுல் அதிகம் பேசப்படாத சிறுபான்மையினரிலும்சிறுபான்மையினரான சாதிய ஒடுக்குமுறைக்குட்படுத்துப்படும் இஸ்லாம் சார்ந்த மக்களைப்பற்றிய படைப்பாக ஜாகீர்ராஜாவின் மீன்காரத்தெரு நாவலை குறிப்பிடலாம்.
சமத்துவம் சகோதரத்துவம் என தனது பிரகடனங்களால் ,வசதிபடைத்துவரும் ஏழையும்பிரார்த்தனையை ஒரே வரிசையில் பள்ளிவாசலில் செய்ய வேண்டும், ரம்ஜான் நோன்பிருக்க வேண்டும், ஒருவரை இன்னொருவர் தோழரே என ஆலிங்கனம் செய்தல் என, வர்க்க பேதங்களை மாற்றிட முயன்ற தத்துவம் இஸ்லாம்.ஆனால் சில பத்தாண்டுகளிலேயே இவை மாற்றமாகிப்போய் இஸ்லாமியத்திலும் பலகாலமாக இந்த பேதங்கள் பல வடிவங்களில் நீட்சியாக வந்து கொண்டுதானிக்கிறது என்பது தான் வெளிச்சம் அதிகம்படாதஉண்மையும் , குறிப்பாக ஒரு இந்திய எதார்த்தமும் ஆகும்.
சாதீய கூறுகளை வர்ணங்களாக கொண்ட நம் சமூகத்தில் இங்குள்ள இஸ்லாமும் அதையேபல வடிவங்களில் பிரதிபலிக்கிறது,சுவீகரித்திரிக்கிறது என்பதே உண்மை. இன்று இஸ்லாமிய சமூகžர்திருத்தங்களை மதம் சார்ந்த ஒற்றைக் கலாச்சாரத்தை உருவார்ந்த எத்தனிக்கும் மதப்பழமைவாதிகளுக்கு( தங்கள் மதம் சார்ந்த பழமைவாதத்தில் சிறுபான்மை மதவாதம், பெரும்பான்மை மதவாதம் என இரு சாரரின் நிலைபாடுகளும் ஒன்று போலவே இருப்பதை பார்க்கலாம்)இதனை ஏற்றுக் கொள்வதிலும், இஸ்லாத்தில் உள்ள தலித்தியம் பேசுவதிலும் நாம்இவர்களிடம் கசப்புணர்ச்சியையேகாணமுடிகிறது. சாதீயத்தை நாங்கள் ஏற்பதில்லை எதிர்க்கிறோம் என்ற வார்த்தைகளுக்குமேல்இந்த பிரச்சனைகளை பூசி மெழுகு வெளியே தெரியாமல் செய்வதிலும் அக்கறை கொண்டவர்களாக இவர்கள்இருக்கின்றனர் என்பதே உண்மை. இதை முற்போக்காளர்கள், படைப்பாளிகள் சொல்லும்போதும் வெறுப்புணர்வுடன் இத்தகைய உண்மைகள் வெளிவருவதை விரும்பாமல் மறைப்பதன்மூலமே இவர்கள் இஸ்லாமியர்களுக்கு கவுரவம் எனவும் நினைக்கின்றனர். எனக்கு தெரிந்து ஒரே ஊரில்இருக்கும் இஸ்லாமியரிடம் பரஸ்பரம் சாதாரண வணிக தொடர்புகள் இவற்றை மீறி திருமணதொடர்புகள் கொள்ளாதவர்களாக ,சின்னக்கட்சி ,பெரிய கட்சி என தங்களுக்குள் சங்கேதவார்த்தைகளுடன் இன்றளவும் இருக்கக்கூடிய இஸ்லாமிய சமூகத்தினரும் உண்டு.
ஆனால் இது அரண்மனை ரகசியாமாய் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்பட்டுநீண்டகாலமாக வருவதும் இன்றளவும் நிகழும் எதார்த்தம் . நாவிதம் செய்யும் இஸ்லாமியரின் வீட்டிலும்,மீன்கார தெரு நாவலில் வருவது போன்ற மீன்கார சனங்கள் போன்றோரின் வீடுகளோடும் திருமண தொடர்புகள்வைக்காத ராவுத்தர், லெப்பை பிரிவினரும் இன்னும் இருந்து வருகிறார்கள். கடற்கரையோரமீனவர்கள் மரக்காயர்கள் என்ற சற்று சமமாக மதிக்கப்பட்டாலும் ,பல பிரிவுகளாய் இருப்பதன் மூலம் தமிழ் முஸ்லீம்களிடம்சாதிய கூறுகளை உற்று நோக்கின் காணலாம்.(இவர்களில் ஒருவருக்குள் ஒருவருவர் திருமண உறவுகளுக்கு தடையேதுமில்லை என்றாலும், அரிதாகவே இன்றளவும் திருமணங்கள் இவற்றைமீறி நடைபெருகின்றன என்பதே உண்மை)
இவைகள் வெளியே தெரியாமலிருக்க முக்கிய காரணமாக இருப்பதற்கு வழினபாட்டளவில் இஸ்லாம் இங்குள்ள ஏனைய இந்து சாதியினருக்கு அன்னியமாக இருப்பதும்,அரபு மொழி பாங்கு, பிரார்த்தனை ,பெயர்கள் என நாக்கில் நுழையாததாக, மற்ற சமூகத்தினருடையபார்வையில் இவை வெளியே தெரியவராத பூடகமான விசயங்களாக இருக்கின்றன. இத்தகையசூழலில் ஜாகீர்ராஜாவினுடைய இந்த நாவல் இந்த தளத்தினுள் ஊடுருவிச் சென்று பதிவுசெய்ய முனைத்திருப்பதை வரவேற்புக்குரியது.
மீன்காரத் தெருவின் இஸ்லாமிய மக்கள் அன்றாடம் மீன் பிடித்து விற்பதிலிருந்து, சாதாரன வேலைகளூக்குப் போகும்சாமான்யர்கள். தலித் இஸ்லாமியர்களாக மேல்தட்டுஇஸ்லாமியர்களால் அவர்கள் நடத்தப்பட்டு. அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்படுவதும்,மீன்காரத்தெரு பெண்கள் பங்களா
தெருக்காரர்களால் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும்ஏழ்மை அவர்களை எதையும் சகித்துக் கொள்பவர்களாக ஆக்கி வைத்திருப்பதையும் இந்நாவல் பேசுகிறது.கதை மாந்தர்கள் அவர்களுடைய மொழியிலேயேதங்கள் உணர்வுகளைச் இந்நாவலில் சொல்வது என்பது வாசிப்போரை அவர்களின் மன உணர்வுகளுக்கு அருகில் அழைத்துப்போய் பல சமயங்களில் அவர்களுடைய வேதனைகளோடு ஒன்றிப்போகவைக்கிறது. ஆமீனா பங்களாத்தெரு சலீமினால் வஞ்சிக்கப்படுவதும், வீட்டு வேலை கொடுப்பது ஜக்காத் (தானம்)கொடுப்பது என ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக பார்க்கும் அவர்களை ஆமீனாவின் சகோதரன்நைனா வெறுத்து வீராப்புக்காரனாக வாழ்வதும், சதா ஏழ்மையுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மீன்காரத்தெரு மக்களுக்கு பிற தலித் மக்கள் நண்பர்களாக அன்னியோன்யம்உள்ளவர்களாக இருப்பதும் நெகிழ்வானவை. பெருமாள்கோவில் பூசாரிக்கு சவரம் செய்யும்நாவிதன் தாழ்த்தப்பட்டவராக நடத்தப்படுவதனால் ஏற்படும் அவமானங்களால் , அவர்களுடையகுமுறல்களுடனான ஆவேசத்தையும் புரிந்து கொள்ளமுடிகிறது. நைனாவின் நண்பன் நாவிதர்சண்முகத்தின் எதிர்வினையும் அத்தகைய ஆவேசமே.
அத்தகைய மக்களின் உறவுகளும் காதலும் குமுறல்களுமே மீன்கார தெருநாவலின் கதையோட்டமாக இருக்கின்றது. நைனாவின் குழந்தையை சுமந்து இறந்துபோகும்அவனுடைய காதலி வள்ளி. பள்ளிவாசல்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத உறவு. ஆனால்சக தலித் மக்களுடன் மீன்கார தெரு மக்களும் அவளை வள்ளிபீவியாக அங்கீகரித்து வழிபடுவதுடன்கதை நிறைவுறும் இடம் ,தங்களை கசக்கிப்பிழிந்து வாழும் மேட்டுக் குடியினருக்கு எதிரானகலக்க குரலாக இந்நாவலில் பதிவுசெய்யப்படுகிறது. நாவலின் இழுத்துச்செல்லும் நடை, இதுவரைஎழுதத் துணியாத களம் என பலவும் இந்நாவலுக்குரிய சிறப்பாக கொள்ளலாம். ஷேக்கா,ஜக்கரியா, மும்தாஜ், கருப்பி, ஆயிஷா, பாத்தம்மா, ரெஜியா என எதார்த்தமான கதைமாந்தர்களும், அவர்களின் உயிரோட்டமான உரையாடல்களும் மீன்காரத் தெரு நாவல் வாசிப்பிலும், அதன்பின் நீண்டகாலம் மனதில் நிற்கக்கூடிய கதையாகவும் இருக்கிறது.