Saturday, December 25, 2010

வடுக்கள்

முன்று நாட்களுக்கு முன்பு
துயரமா கஇருந்தது ,
கோபமாக்கியது ,
மகிழ்ச்சியைக்கொடுத்தது எல்லாமுமே ,
இன்று மாறிப்போய்....
சலனமற்று, கடந்துபோயிருந்தது ,
முன்று நாட்களுக்கு முன்பு -
சூழ்ந்திருந்த வங்கக் கடல் புயல் போல் .

வரிக்குதிரையின் கணக்கிலடங்காத
வரிகளைப்போல ...
புதிய நாளான இன்று புதிதாய் நான்..
எதிர்பார்ப்புகளுடனும்,
கண்ணுக்குதெரியாத
புதிய சில வடுக்களுடன் ....
எப்பொழுதும்போல் ..!