Saturday, October 29, 2011

ஏழாம் அறிவு எனும் மோசடி

ஏழாம் அறிவு எனும் மோசடி
___________________________
ஏழாம் அறிவு திரைப்படம் ஒரு பகட்டான மோசடியே !,தமிழகத் திலுருந்துதான் உலகிற்கே தற்காப்புக்கலை , நோக்குவர்வம் எனும் வசியக்கலை என உலகிற்கே ஏற்றுமதியாகி இருக்கிறது என்பது தமிழரை
புகழ்ந்தது ஏமாற்றும் பசப்புக் கலையே !,அதிலும் நோக்கு வர்மம் என்பது சாத்தியமற்ற அபத்தத்திலும் அபத்தம் ,இந்த பொய்யை பரப்ப ஐந்து ,ஆறு அறிவு பத்தாதென்று ஏழாம் அறிவாம்!! இதை வைத்துத்தான் ஒட்டுமொத்த படத்திலும்
வித்தை காட்டப்பட்டுள்ளது,இப்படி ரிமோட்டாக ஒரு மனிதனை மாற்றி கொலை, தற்கொலை ,அதுவும் வினாடி நேரத்தில் கொல்வதென்றால் அணு குண்டே தேவையில்லையே ?
எகாதிபத்தியத்திற்கு அதன் போக்கிலேயே போய் குறைந்த விலையில் உற்பத்தி ,அதிக வியாபாரம் எனும் தந்திரத்தில் பதிலடி கொடுப்பதால் ,சீனாவுடன் போட்டி போடுவது என்பது சகிக்க முடியாத பாதகம் தான்,எனவே அதன் எடுபிடிகளுக்கும் அதனை சகிக்க முடியாதுதான்.!இதன் பக்க வாதமே ஏழாம் அறிவு எனும் மோசடி. அண்டை நாட்டுடன் நல்லுறவு என்பது ஏகாத்திபத்திய ஆயுத வியாபாரிகளுக்கு பிடிக்காத விஷயம் ,இது ஏழாம் அறிவில் விஷமாக கக்கப்பட்டுள்ளது.