காக்கி சட்டைக்குள் சிகப்பு சிந்தனைகள்
நூல் ஆப் இயர்: கோ. ராமகிருஷ்ணன்
பக்கங்கள்:206 (புகைப்படங்களுடன்) விலை:150 (கவின் பதிப்பகம்)
செல் நெம்பர்: 7373014251
நமது தா.மு.எ.க.ச. வட்டத்தில் சேலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தன்னை இணைந்து கொண்டு ஒரு படைப்பாளியாக, கவிஞராக உள்ள காவல் துறையிலிருந்து ஒய்வு பெற்ற திரு. கோ.ராமகிருஷ்ணன் தனது சுய வரலாற்றை நூலாக்கி தந்துள்ளார். பொதுவாகவே எனது வாசிப்பில் முக்கிய இடத்தை பிடிப்பது சுய வரலாற்று நூல்கலே. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் தனித்துவமான அனுபவங்கள், போராட்டங்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல சுவரஸ்யமான விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இன்றைய நாளிலிருந்து அடுத்த நாலே மனித வாழ்வை புரட்டி போடும் ஆச்சர்யங்கள் நிறைந்ததுதான். காவல்துறை போன்ற மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, பயமுறுத்தக்கூடிய துறையிலிருந்து தனது அனுபவங்களை எழுதி இருக்கும் மிக சிலர்தான் சுய வரலாற்று நூல்களை எழுதி உள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தாரமங்கலம் அருகில் மல்லிக்குட்டை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.
இவரது அப்பா கோபாலன் இடதுசாரி கட்சியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் காவல்துறையில் சேர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்று காவல்துறையில் சேரபோவதை அறிந்த அவரது அப்பா கோபாலனை தடுத்து விட்டார். பிரிட்டிஷ்காரன் சுதந்திர போரட்ட வீரர்களை தடி கொண்டு தாக்குவதற்காக காவல்துறையை வைத்து இருக்கிறான். நம் சுதந்திரத்திற்கு எதிரான பிரிட்டிஷ்காரனுக்கு வேலை செய்வதா? வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்பு கோபாலன் மேட்டூர் மில் தொழிலாளியாக கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்கத்திலிருந்து தன்னை இணைந்து பல தொழிலாளர்கள் மில்லில் சேருவதற்கும், அவர்களுக்கு பல தேவைகளை பெற்று தருவதிலும் விருப்பமுடையவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவரான பி. ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு இருந்தார். அது சமயம் கோபாலனை சந்திக்க ரகசியமாக வந்திருந்த போது ராமகிருஷ்ணன் கை குழந்தையாக இருந்த போது கோபாலன் அவருக்கு ராமமூர்த்தி அவர்களை குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் போது தனது பெயரை ராமமூர்த்தி என்றே வைத்தார். காவல்துறை தொடர்ந்து தேடி வந்த P.R. கோபாலனை சந்தித்த செய்தி போலிஸ்க்கு தெரிந்து கோபாலனை கைது செய்து கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கி சேலம் சிறையிலும், பிறகு கோவை சிறைக்கும் மாற்றியது. சேலம் சிறையில் அந்த காலகட்டத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தி கம்யூனிஸ்ட் சிறை கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். கோபாலன் கோவையில் இருந்ததால் இதிலிருந்து தப்பி பிழைத்தார் என்றே சொல்லலாம். ராமமூர்த்திக்கு ராமகிருஷ்ணன் என்ற பெயர் வந்ததும் ஒரு சுவையான செய்தி இந்த நூலிநூ காக்கி சட்டைக்குள் சிகப்பு சிந்தனைகள்
நூல் ஆப் இயர்: கோ. ராமகிருஷ்ணன்
பக்கங்கள்:206 (புகைப்படங்களுடன்) விலை:150 (கவின் பதிப்பகம்)
செல் நெம்பர்: 7373014251
நமது தா.மு.எ.க.ச. வட்டத்தில் சேலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தன்னை இணைந்து கொண்டு ஒரு படைப்பாளியாக, கவிஞராக உள்ள காவல் துறையிலிருந்து ஒய்வு பெற்ற திரு. கோ.ராமகிருஷ்ணன் தனது சுய வரலாற்றை நூலாக்கி தந்துள்ளார். பொதுவாகவே எனது வாசிப்பில் முக்கிய இடத்தை பிடிப்பது சுய வரலாற்று நூல்கலே. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் தனித்துவமான அனுபவங்கள், போராட்டங்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல சுவரஸ்யமான விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இன்றைய நாளிலிருந்து அடுத்த நாலே மனித வாழ்வை புரட்டி போடும் ஆச்சர்யங்கள் நிறைந்ததுதான். காவல்துறை போன்ற மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, பயமுறுத்தக்கூடிய துறையிலிருந்து தனது அனுபவங்களை எழுதி இருக்கும் மிக சிலர்தான் சுய வரலாற்று நூல்களை எழுதி உள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தாரமங்கலம் அருகில் மல்லிக்குட்டை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.
இவரது அப்பா கோபாலன் இடதுசாரி கட்சியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் காவல்துறையில் சேர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்று காவல்துறையில் சேரபோவதை அறிந்த அவரது அப்பா கோபாலனை தடுத்து விட்டார். பிரிட்டிஷ்காரன் சுதந்திர போரட்ட வீரர்களை தடி கொண்டு தாக்குவதற்காக காவல்துறையை வைத்து இருக்கிறான். நம் சுதந்திரத்திற்கு எதிரான பிரிட்டிஷ்காரனுக்கு வேலை செய்வதா? வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்பு கோபாலன் மேட்டூர் மில் தொழிலாளியாக கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்கத்திலிருந்து தன்னை இணைந்து பல தொழிலாளர்கள் மில்லில் சேருவதற்கும், அவர்களுக்கு பல தேவைகளை பெற்று தருவதிலும் விருப்பமுடையவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவரான பி. ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு இருந்தார். அது சமயம் கோபாலனை சந்திக்க ரகசியமாக வந்திருந்த போது ராமகிருஷ்ணன் கை குழந்தையாக இருந்த போது கோபாலன் அவருக்கு ராமமூர்த்தி அவர்களை குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் போது தனது பெயரை ராமமூர்த்தி என்றே வைத்தார். காவல்துறை தொடர்ந்து தேடி வந்த P.R. கோபாலனை சந்தித்த செய்தி போலிஸ்க்கு தெரிந்து கோபாலனை கைது செய்து கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கி சேலம் சிறையிலும், பிறகு கோவை சிறைக்கும் மாற்றியது. சேலம் சிறையில் அந்த காலகட்டத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தி கம்யூனிஸ்ட் சிறை கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். கோபாலன் கோவையில் இருந்ததால் இதிலிருந்து தப்பி பிழைத்தார் என்றே சொல்லலாம். ராமமூர்த்திக்கு ராமகிருஷ்ணன் என்ற பெயர் வந்ததும் ஒரு சுவையான செய்தி இந்த நூலிலே இருக்கிறது.
சிறு வயது முதலே கலை ஆர்வம் கொண்ட ராமகிருஷ்ணன் பள்ளியிலும், கல்லூரியிலும் நாடக மேடை அனுபவம் கிடைத்தது. வாணியம்பாடி கல்லூரியில் படிக்கும்போது இலக்கிய கையெழுத்து பத்திரிக்கை நடந்த அக்காலக்கட்டத்தில் பேராசிரியராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் ஊக்கம் அளித்தனர். தமிழகத்தில் பெரும் ஆளுமைகளான தந்தை பெரியார், ஜீவானந்தம் போன்ற தலைவர்களையும் இக்காலகட்டத்தில் ராமகிருஷ்ணன் பார்த்து, பேசி இருக்கிறார். அக்காலக்கட்டத்திலே நடைபெற்ற தி.மு.க. மாணவர் எழுச்சி போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். ராமகிருஷ்ணன் சப் இன்ஸ்பெக்டராக பயிற்சி முடிந்த பின்பு ட்ரைனிங்கிற்கு வாழப்பாடி காவல் நிலையத்தில் சேர்ந்தார்.
பயிற்சி பள்ளியிலே சமூக அக்கறையுடைய அசோகன் என்ற காவல் ஆய்வாளரிடம் பயின்றார். ராமகிருஷ்ணனுடைய அப்பா கோபாலன் சொன்ன வார்த்தைகள் நேர்மையாக இரு, எளிய மக்களிடம் கனிவுடன் நட, சீர்திருத்தக் காரணாக செயல்படு. நேர்மையாக இருப்பதனால் எற்படும் சோதனைகளை தாங்கி கொள், நல்ல மனிதனாக இரு என்ற அறிவுரையை தனது கடமையாக ஏற்று தனது காவல்துறை பணிகாலம் முழுவதும் ராமகிருஷ்ணன் கடை பிடித்தமையும், தமிழகம் முழுவதும் பல இடங்களில் வேலை பார்த்த அனுபவங்களையும் சுவரஸ்யமான நடையில் எழுதியமைக்காக இந்நூலை நிச்சயம் பாராட்டலாம். நேர்மையாக இருப்பதுயென்பது சோதனையையும், வேதனையையும் தரக்கூடிய வாழ்க்கை முறையாக நம் சமூகம் அமைப்பு மாற்றி இருக்கிறது.
கையூட்டு பேர்வழிகள் ஆடம்பர வாழ்வினையும், நேர்மையாளர்கள் சோதனைகளை சந்திப்பதும் நம் சமூக அவலம். மனசோர்வு அளிக்கும் நேர்மையான பாதையைப் பற்றிய மன விசாரணை இந்நூல் எங்கும் பிரதிபலிக்கிறது. இச்சோதனையில் வென்றவராய் ராமகிருஷ்ணன் இச்சுசரிதையில் நிற்கிறார். 2005ல் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்து ஒய்வு பெற்றார். அவருக்கு ஒரு வாசகனாய், படைப்பாளியாய் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அனைவரையும் இந்நூலை வாசிக்க பரிந்துரை நான் செய்கிறேன்.
லில் இருக்கிறது.