Friday, March 04, 2011

சில்லறை பிரச்சனை

சில்லறை பிரச்சனை
-----------------------------------------
ஆண்டி முத்து ராசாக் களுக்கும் ,நீரா ராடியாக்களுக்கும் பல லட்சம் கோடியில் பிரச்சனைஎன்றால் நம்மைப் போல் பாமரார்கள் நிறைய எதிர்கொள்வது சில்லறை பிரச்சனைகளே!
பாரதி கூட இப்போதிருந்தால்
'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பதற்கு பதில் சில்லறை பிரச்சனையடா என்று கவிதை பாடியிருப்பாரோ என்று தோன்று கிறது .
என்ன கொடுமையடா சாமி,சில்லறைக்காக பேரூந்து நடத்துனரிடம் , தேநீர் கடைகாரரிடம், பெட்டிக் கடைக்காரரிடம், ஆட்டோ ஓட்டுனரிடம், சாலையோர சிற்றுண்டி கடைக்காரரிடம்,ஏன் பிச்சைக் காரக் கனவான்களிடம் ,ஒரே பாட்டுதான் ! யப்பா! எல்லோருமே கையில் சில்லறையோடு வரச்சொல்லி அறைவிடாத குறையாக கேட்டுக் 'கொல் 'கிறார்கள் .எனவே குறைந்த,நீண்ட தூர ,பயனமாயினும் ,ஏன் ,அடுத்த தெருவுக்குப் போனாலும் ,அடையாள அட்டையை மட்டும் கொண்டு செல்லாமல் , குறைந்தது ஐம்மது,நூறுக்கு சில்லறைக்காசு எடுத்துச்செல்வது நலம்,
(குறிப்பு: :குறைந்த்தது சில்லறைக்கு- நூற்றுக்கு ஐந்து ருபாயாவது கமிசன் அழ வேண்டும்! )
ஹூம் என்ன செய்வது அவசரத்தில் ,எதையும் திட்டமிட்டுச செய்வதென்பது நமக்கு கைவராத கலையாயிற்றே !
இருப்பினும் ,மறக்காமல் கால் கிலோ சில்லறையோடு கனவான்களாக செல்வதே மரியாதையாக இருக்கும் போல் இருக்கிறது.!?

No comments: