Monday, September 26, 2022

சவுக்கடியும் மன்னரும்
________________




மன்னர் 
விரும்பும் 



போது

அடிக்கடி முல்லாவை அழைத்து பேசுவார். மன்னர் ஒரு காலத்தில் இளமையில் அழகாக இருந்தவர்,தற்போது மூப்பின் காரணமாக தளர்ந்தவராக இருந்தார்.
முல்லா இருந்த சமயத்தில் மன்னர் தன்னை ஓவியமாக வரைய இரண்டு சிறந்த ஓவியர்களை வரவழைத்து இருந்தார்.இருவரும் ஓவியம் வரைந்து மன்னரிடம் கொடுத்தார்கள். இரண்டு ஓவியங்களையும் பார்த்தார் மன்னர். ஒன்றை பார்த்து முகம் சுளித்தார், இன்னொன்றை பார்த்து முகம் மலர்ந்தார். பிறகு அமைச்சர் ஒருவரை கூப்பிட்டு சிறப்பாக வரைந்திருக்கிறார் என்று ஒரு ஓவியருக்கு நூறு பொற்காசுகளை கொடுத்து அனுப்பினார். 
இன்னொரு ஓவியரை முகம் கடுகடுக்க பார்த்து அமைச்சரிடம் சொல்லி இவருக்கு இரண்டு சவுக்கடி கொடுத்து அனுப்புங்கள் என்றார். 
இருவரும் சென்ற பிறகு முல்லா பவ்யமாக மன்னரை பார்த்தார். மன்னர் இரண்டு ஓவியங்களையும் முல்லாவிடம் காண்பித்தார். ஒரு ஓவியர் வரைந்த ஓவியத்தில் மன்னர் அழகாக இளமையாக இருந்தார். அவருக்குத்தான் 100 பொற்காசுகள் கொடுத்து அனுப்பி இருந்தால் மன்னர். 
இன்னொரு ஓவியர் தற்போது மன்னர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அச்சு அசலாக வரைந்து இருந்தார். அதிலும் சிரித்துக் கொண்டுதான் மன்னர் இருந்தார் ஆனால் முகத்தில் சுருக்கங்கள் இருந்தன.அவருக்குத்தான் இரண்டு சவுக்கடி கொடுத்து மன்னர் அனுப்பி இருந்தார்.
உண்மையை பதிவு செய்த இரண்டாவது ஓவியரின் நிலை கண்டு முல்லாவிற்கு மனதிற்குள் மருக்கடியாக இருந்தது. 
உண்மைதான் எவ்வளவு கசப்பானது என்று மனதிற்குள் முல்லா நினைத்துக் கொண்டார்.

முல்லா மன்னரிடம் விடை பெற்று கிளம்பினார். முல்லாவைப் பார்த்து மன்னர் சிரித்து வழி அனுப்பினார். இரண்டாவது ஓவியரின் அச்ச அசலான ஓவியத்தை பார்த்தது போல் இருந்தது அவருடைய சுருக்கங்கள் நிறைந்த வயோதிக முகம்.
முல்லா பவ்யமாக தலை வணங்கி மன்னரிடம் விடைபெற்றார்.

Tuesday, June 26, 2018

செல்லாத பணம்- இமையம்


எழுத்தாளர் இமையத்தின் புதிய நாவல் -செல்லாதபணம் வாசிக்கத் துவங்கீய போது இந்த நாவல்அவருடைய  பழைய நாவல்கள் எங்கதை, கோவேறுகழுதைகள் போன்று வாசிப்பில் இழுத்துக் கொண்டுசெல்லுமா, அவருடைய கதைச் சூழலில் அவரின்எழுத்து நடையில் மூழ்கி எழுந்த அனுபவங்களைஅசைபோட்டபடி வாசிக்கத் துவங்கினால், இமையம்தனது புதிய படைப்பிலும் படைப்பிலக்கியத்தின்உச்சங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்வதில்தான் வல்லவர் என்பதை உத்தரவாகமாகவேதருகிறார் செல்லாப் பணத்துலும்.

     தீக்காயங்களுடன் தற்கொலை முயற்சியிலா? அல்லது அவள் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆட்டோ ரவியின் அடாத கொடுமையின்உச்சத்தில் ரேவதியை கொழுத்தி விட்டு விட்டானா? என்று பதைப்பதைப்பில் துவங்கும் நாவல் முடியும்222-வது பக்கம் வரை நம்மை இந்தக்கதை மனதைபதைக்க வைக்கிறது.

     ரேவதி தீக்காயங்களுடன், அருகிலுள்ள பலமருத்துவமனைகள் கைவிரித்து விட்ட நிலையில்பாண்டிச்சேரி ஜிப்மரில், கணவன் ரவியால்சேர்க்கப்படுவது தான் நாவலின் துவக்கம். கூடவேதனது மகளுக்கு என்ன ஆயிற்றோ என்றபதைபதைப்பில் அப்பா ஹெட்மாஸ்டர் நடேசன் அம்மாஅமராவதி பதைபதைப்புடன் வாடகை காரில்ஜிப்மருக்கு வருகிறார்கள். சென்னையில் இருந்துஅண்ணன் முருகன் ரேவதியின் தோழியும்அண்ணியுமான அருண்மொழியும் வந்துசேருகிறார்கள்.

      பொறியியல் பட்டதாரியான ரேவதி பட்ட படிப்புமுடித்து நல்ல வேலையும் கிடைக்கக் கூடிய சூழலில்பர்மா பஜார், பர்மா அகதிகளான ஏழ்மையானகுடும்பத்தை சேர்ந்தவன், திருமணம் ஆகாத அக்கா, கவலைபடும் அம்மா,(                   ) வயதான அப்பாஎன்று குடும்பமே ஆட்டோ ஓட்டும் ரவியை நம்பிஇருந்தது.


     அதிகம் படிக்காத ரவி சற்று சிவப்பான கலையானதோற்றமுடையவன். ரேவதியின் மீது முதல்சந்திப்பிலேயே காதலில் வீழ்ந்து நாளொன்றுக்குஉடம்பில் பச்சை குத்திக் கொண்டு எப்படியோரேவதியை கவர்ந்து விட்டார். தோழிஅருண்மொழியுடைய, குடிகாரன் அதிகம்படிக்காதவன், அடாவடிக்காரன். இவனை போய்காதலிக்கிறாயே என்ற எச்சரிக்கையையும் அப்பா, அம்மாவுடைய கவலை வெறுப்பு, வேதனை இவற்றைஎல்லாம் தாக்குப் பிடித்து ரவியைத் தான் திருமணம்செய்து கொள்வேன் என்ற பிடிவாதத்தில்வெற்றிப்பெற்றுவிட்ட ரேவதி அதன் பிறகுஅனுபவித்த வாழ்க்கை நரகமாகவே போய் விட்டது. இந்த ஆறு வருடங்களில் இரண்டு குழந்தைகள்ஆகிவிட்ட போதும் அவளுக்கு தினமும் குடித்துவிட்டுவரும் ரவியிடம் அடியும் உதையும் தான்வாழ்க்கையாக இருந்தது.

     படித்த படிப்புக்கான நல்ல வேலையையும் தன்னைவிட பெரிய ஆள் ஆகிவிடக் கூடாது என்ற ரவியின்அடாவடிப் போக்கினால் வீட்டுப் பெண்ணாகவே மாறிஇருந்தால் ரேவதி. நல்ல வருமானம் கிடைத்தநாட்களில் ரவி நல்லவனாக இருப்பான் . வருமானம்இல்லாத நாட்களில், மனித தன்மையை இழந்து போய்இருப்பான்.  அமராவதி ஐந்தாவது மாடி தளத்தில்எண்பத்தியொன்பது சதவீதம் தீக்காயம் அடைந்தரேவதி ஐந்து நாள் ஜீவ மரண போராட்டத்தில்இருக்கும் போதெல்லாம், இடையிடையே நினைவுவந்து கொஞ்சம் கொஞ்சம் பேசும் போதெல்லாம், எப்பொழுதாவது வாக்குமூலம் சொல்லி தன் மகளைகொழுத்தி விட்ட மருமகன் ரவியை எப்பொழுது  ஜெயிலுக்கு போவான் என்று கருவிக் கொண்டுஇருந்தார். மருத்துவமனையின் முகப்பிலும்தாழ்வாரத்திலுமாக ஐந்து நாட்களாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள், ஹெட்மாஸ்டர் நடேசனும், தாயார் அமராவதியும் குழந்தையில் இருந்து ஒரேமகள் என்று செல்லமாக வளர்த்த ரேவதிஅன்றாட்ங்காய்ச்சிகாரனான ரவியை தான்திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாகஇருந்தாள். இல்லை என்றால் என்னை உயிரோடுபார்க்க முடியாது என்று சொல்லி அப்பா அம்மாவின்அனுமதியுடன் ரவியை திருமணம் செய்துகொண்டாள். மனம் கசந்து போன நடேசன் இந்த ஆறுவருட காலத்தில் மகளிடம் பேசுவதை நிறுத்தி விட்டுஇருந்தார்.

     அமராவதி கொஞ்ச காலத்திலேயே மகள் ரேவதிவரும்போதெல்லாம் ரேவதியுடைய பரிதாபநிலையைக் கண்டு அழுது புலம்புவாள். ஆட்டோடியூவில் இருந்து மாதம் தவறாமல் நடேசனிடம் கேட்டுவாங்கியும், தெரியாமலும் ரேவதிக்கு பணம்கொடுத்துக் கொண்டே இருந்ததை நினைத்து தனதுமகள் எப்படியாவது பிளைத்துக் கொண்டு வரவேண்டும் என்று தாயுள்ளம் அழுதது. ரேவதிவரும்போதெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே வீட்டிற்குவெளியே வந்து நின்று ரவி கூட்டிக் கொண்டு போய்விடுவான்.

     அமராவதி உள்ளம் கொந்தளித்துக் கொண்டேஇருந்தது. இந்த சனியன் புடித்தவன் தான் ரேவதியைகொளுத்தி இருப்பான். அவனை இப்பொழுதாவதுஜெயிலுக்கு மகள் அனுப்பி வைப்பாள் என்று ஐந்தாம்நாள் மரணத்தை தொட்டுக் கொண்டு இருக்கும்ரேவதியிடம், மரண வாக்குமூலம் வாங்க வந்தநீதிபதியுடைய, வாய்மொழிக்காக காத்திருந்தார்கள், ரேவதி குடும்பத்தினர்.

    ஆனால் ரேவதி சமைக்கும்போது ஏற்பட்டவிபத்தினாலேயே தனக்கு தீக்காயம்ஏற்பட்டிருக்கிறது என்று வாக்குமூலம்கொடுத்திருந்தாள் ரேவதி. மருத்துவமனையில்சுற்றிக் கொண்டிருந்த ரேவதி புருசன் ரவியை,அருண்மொழி மறித்து, இப்படி அநியாயமாககொளுத்தி விட்டாயே கொலைகார பாவி என்றுதிட்டிய அருண்மொழியை பார்த்து ரவி, அக்கா நான்சத்தியமாக தீ வைத்து கொல்லவில்லை. ஆட்டோ டியூகட்ட பணம் வாங்கி வந்திருந்தாள். அதில் ஐநூறுரூபாய் எடுத்து செலவு செய்து விட்டேன். அதற்குஎன்மீது சண்டை போட்டாள். நீ குடித்தே நம்குடும்பத்தை அழித்து விட்டாய் என்று ஆவேசமாககத்தினாள். செத்து ஒழிகிறேன் என்றுசொன்னவளிடம்  போ போய் செத்து தொலை என்றுகோவத்தில் சொல்லி விட்டேன். அவள்சமையலறைக்கு சென்று தீ வைத்துக் கொண்டாள். அவள் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திகொண்டு இருந்தால் கூட  பிழைத்திருப்பாள். ஆனால்அவள் ஆட்டோவிற்கு வைத்து இருந்த  டீசலை ஊற்றிதீ வைத்துக் கொண்டாள். என்னால் அவளைகாப்பாற்ற முடிய வில்லை அக்கா என்று அழுதான்.ஆனால் அந்த அழுகையின்  ஊடே இன்னிக்குரேவதியை காப்பற்ற பத்து லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு என் பிள்ளையை எப்படியாவதுகாப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டு இருக்கிறார்மாமா. ஆனால் இந்த ஆறு வருடத்தில் என்னிடம்என்றாவது பேசி இருக்கிறாரா, அவருடைய கவுரவம்என்னிடம் பேசுவதை தடுத்தது. எதுமில்லாதவன்பிச்சைக்காரன் என்று அவருடைய ஒட்டுமொத்தகுடும்பமும் ஏசிக் கொண்டு இருந்தது. அவருக்குஇருக்கும் வசதிக்கு என்னை கொஞ்சம் கைதூக்கிவிட்டிருந்தால் இந்நேரம் நானும் மனுசனாகி பத்துஆட்டோ ஓட்டி ஓனராகி இருப்பேன். பணக் கஸ்டமும்வந்திருக்காது. எங்களுக்குள் சண்டையும்வந்திருக்காது. இன்றைக்கு எத்தனை பணம்கொடுத்தாலும் அவள் உயிரை காப்பாற்ற முடியுமா.எல்லாம் செல்லாத பணமாக போயிருச்சு.

     அம்மா அமராவதியினுடைய மனக் குமறல்கள்நடேசனுடைய, அருண்மொழியுடைய என்றுஒவ்வொரு கதாப் பாத்திரங்களும் தங்களுக்கே உரியவாழ்வின் எதார்த்தத்தை நியாயங்களைகுமுறல்களாக  வெளிப்படுத்தி இருப்பதுஇமயத்தினுடைய எழுத்தின் சிறப்பு. ரேவதிதனக்கேயான நியாயத்துடன் தனது இரண்டுகுழந்தைகளின், வாழ்வினையும் கருதிகொடுமைக்கார கணவன் ரவிக்கு தண்டனை ஏதும்வாங்கித தராத, மரணத்தின் தருவாயிலும், பழி, பாவங்கள் அல்லாத மனுசியாக இருந்தாள். காதல்வாழ்வில் இருக்கிறது வறுமை, வாழ்வை புரட்டிப்போடுகிறது. சமூகம் ஒன்றுமில்லாதவர்களைவிட்டேத்தி மன நிலைக்கு மாற்றி விடுகிறது.

      அடியும் உதையுமான குடும்ப வாழ்க்கை, குடிப்பழ்க்கம், அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையாய்போய் விட்டது. சற்று வசதியான நடுத்தர வர்க்கமோ, வறட்டு கவுரவங்களின் சிறைபட்டுக் கிடக்கிறது. ரேவதியின் மரணம் நம்மை உலுக்கி விடுகிறது.

     ஐந்தடுக்கு ஜிப்மர் மருத்துவமனையில்அடுத்தடுத்து உள்ளே வரும் தீக்காய நோயாளிகளும்,சரமாரியாக தினசரி வெளியேறும், மரணங்களும் நம்சமூகத்தின் இந்த இருண்ட பக்கங்களையும் அங்குவரும் மனிதர்களின் உணர்வுக்குமுறல்களையும் ஒருவடுபோல் வாசித்த பின்பும் நெருஞ்சிமுள்ளாய்உறுத்திக் கொண்டிருக்கும் எதார்த்தத்தை செல்லாதபணம் எனும் இலக்கியப் படைப்பாய் நம் முன்நிருத்தியிருக்கிறார் இமையம்.

--







மார்க்ஸ் - 200

பாலம் வாசகர் சந்திப்பில் 06.05.18 அன்று -மார்க்ஸ் 200 :  பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாக மேரி
காப்ரியலின் - " காதலும் மூலதனமும் " ( Love and Capital)எனும் நூலை சஹஸ் அறிமுகப்படுத்தினார்.

மார்க்சியத்தை தெரிந்துகொள்ள ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.மார்க்சின் வாழ்க்கையையும் ,மார்க்ஸ் எனும் இரத்தமும் சதையுமான மனிதர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை மிகச் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கும் நூலாக ,இந்நூலை,சஹஸ் குறிப்பிடுகிறார் .
புத்திசாலித்தனமும் ,முரட்டுத்தனத்தையும் ஒருங்கே பெற்றிருந்த மார்க்ஸின் இளமைப் பருவத்தில்,காதலியாய் ,மனைவியாய் ஜெனி அவர் வாழ்வில் இணைந்தார். பின்பான, ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கைத் துணையாக, மட்டுமல்லாமல் அவருடைய எழுத்துப்பணியில் ஊக்குவிக்கும் அறிவு ஜீவியாக ஜென்னி திகழ்ந்தார்.இளைஞர்களாக சந்தித்த மார்க்சும், எங்கெல்சும் ,வாழ் நாள் முழுவதற்குமான நண்பர்களாய் பரிணமித்தனர்.ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் என தனது புரட்சிகர தத்துவத்தால், அதிகார வர்க்கத்தால் மார்க்ஸ் துரத்தப்பட்டதால், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார் எக்கல்ஸ். அவரது மூலதனம் எனும் நூலை எழுதிட எடுத்துக் கொண்ட இருபதாண்டு காலத்திற்கு மேலாக, எங்கல்சின் பொருளதவியினாலேயே,
வறுமையுடன் போராடிய மார்க்சினால் குடும்பத்தை நடத்த முடிந்தது. மார்க்ஸைப் போலவே அறிவுஜீவிகளான , அவருடைய மகள்களான, ஜென்னிசன், லாரா, எலனார் ஆகியோரின் வாழ்வின் போராட்டங்களையும், தாதியாக வந்துஅவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக சிரமங்களை விரும்பத்துடன் வாழ்ந்த ஹெலன்
 டெமூத், என இந்த அனைவருடைய பங்களிப்புமே மார்க்சை வாழ்வில்,தூணாக தாங்கிப் பிடித்தன.
போராட்டமே வாழ்க்கையாக தெரிந்தே தேர்ந்தெடுத்த படியால், மார்க்ஸ், வாழ்வதற்கே ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தியதை அவருடைய கடிதங்கள், அவருக்கு வந்த கடிதங்கள், அவர் காலத்தில் அவரைப் பற்றி நண்பர்கள், மற்றவர்கள், எழுதியவற்றிலிருந்து , நிஜ மார்க்சை, நூலாசிரியர் நம் முன் கொண்டு வருவதில் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதை சஹஸ் வியந்து பாராட்டினார்.

 மூலதனத்தின் முதல் பகுதியை வெளியிட்ட போது மார்க்சுக்கு சிறிது நிம்மதி கிடைத்ததா என்றால் இல்லை. ,ஜென்னி யுடைய மறைவு, மூத்த மகளுடைய மறைவின் வலி, என மார்க்சின் உடல் மேலும் நலிவுற்று மறைந்தார் எனும் நூலின்  பகுதியை  கூறும் போது சஹஸின் குரல்தளுந்தளுத்தது, பங்கேற்றோர் உளமும் நெகிழ்ந்தன. 600 பக்கங்களுடைய இந்த நூல், சிறப்பாக , மிக நீண்ட ஆய்வுகளுடன்,  ஏராளமான தரவுகளுடன் , நுட்பமாக வருட வாரியாக,படைக்கப்பட்டுள்ள விதத்தையும் சஹஸ் தனது உரை நெடுகிலும் குறிப்பிட்டார். . 

கூடுதலான எண்ணிக்கையில் வந்திருந்த வாசகர்கள் , விவாதத்திலும் பங்கேற்றனர்.

Friday, November 24, 2017


சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்.
இவற்றை பாலம் வாசகர் சந்திப்பிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாசகர் சந்திப்பிலும் நான் அறிமுகம் செய்தேன்.
சசி வாரியர் எழுதிய தூக்கிலிடுபவரின் குறிப்புகள் .,
விகடன் பதிப்பில் வெளிவந்த நெடுஞ்சாலை வாழ்க்கை,
விகடன் பதிப்பில் வெளிவந்த மூளை எனும் நூல்,
சென்ற மாதத்தில் அறிமுகம் செய்தது -
நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்.
(எழுத்தாளர் - இருகூர் இளவரசன்).

Wednesday, November 16, 2016

"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்"

பாலம் 13.11. 16- காலையில்,நடைபெற்ற வாசகர் வட்ட நூல் அறிமுகம் ,நண்பர் அழகுராஜ் அவர்களின்
அருமையான புரிதல் தந்த அறிமுக உரையும், விவாதங்களும், நாம் அறியாத ',விவாதிக்காத புதிய விசயங்களை, வாசகர்கள் அனைவருக்கும் கொண்டு சென்றது.

உழைப்பை ஒழிப்போம் - இத் நூலின் ஆசிரியர்கள் இருவர் : பால் லஃபார்க் (மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவின் கணவர் - மறைவு 1911) இரண்டாமவர் பாப் ப்ளாக் 1951-ல் பிறந்தவர். இவருடைய 1985-ல் எழுதிய கட்டுரையையும் கொண்டது இந்நூல்.
உண்மையில் இந்த நூல் சொல்வதெல்லாம் , மனிதஉழைப்பு, அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கால கற்பிதங்கள், நம்மை ஆட்சி செய்யும் மதங்களைப் போல் , நம் இயல்பையும், இந்த புவியையும் எப்படியெல்லாம் சீர்குழைத்திருக்கின்றது என சொல்லும், அற்புதமான படைப்பு ...
ஒரு மேலோட்டமான வாசிப்பிற்கு பிடிபடாத  விசயகணமிக்கது. ஆழ்ந்து வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. தலைப்பு நம்மை மிரட்டினாலும், உண்மையில் இந்நூல் சொல்வது
"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்". நியாமான பலன் தரும் உழைப்பு மட்டுமே, மனிதன் செய்யத்தக்கது , உழைப்பைப் போல்,ஓய்வும் , கலை யும்,இன்ப நுகர்வும் ,நமது உரிமையே"என்பதே.

Tuesday, October 18, 2016

குணக்கேடு: சிறுகதை : சேகு



குணக்கேடு:
                                                                                         சிறுகதை : சேகு


     பூபதியிடத்தில் திருமண புகைப்பட ஆல்பத்தையும், சி.டியையும்
கொடுத்து விட்டு, மீதி பணத்தையும் போட்டோகிராபர் கடை ஊழியர் 
வாங்கிக் கொண்டு, எல்லாம் பிரம்மாதமாக வந்திருக்கிறது, என்று 
எங்க வேல்முருகன் சார் சொன்னார் சார் என்று சொல்லி விட்டு 
கிளம்பினான்.

     அவன் கொடுத்த பெரிய அழகான பையில், இரண்டு 
ஆல்பங்களும், இரண்டு சி.டிக்களும் அழகான கவர்களுடன் 
இருந்தன., உற்சாகத்துடன்  பூபதி வீட்டிற்குள் பையை எடுத்துச்
சென்றான். ஆல்பத்தைக் கண்டவுடன் குடும்பத்தினர் அனைவருக்கும்
உற்சாகம் தொற்றிக் கொண்டது. 
     
     ஆல்பத்தை பிரித்து பூபதி மனைவி சங்கீதாவும், பூபதியின் அம்மா
சுந்தரவள்ளியும், பூபதியின் 8 வயதுமகள் சுபிக் ஷாவும் ஒன்றாக 
உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள், கூடவே பூபதி அப்பா 
நவநீதமும் சேர்ந்து கொண்டார். அவரது செல்வமகள்  ராதிகாவின் 
திருமணத்தின் அழகிய  நிகழ்வுகள், மேலும் அழகாக 
புகைப்படங்களில் காட்சியளித்தது. மணமக்கள் தனித்தனியாகவும், 
இருவருமாகவும், உறவினர்களுடனும் என வண்ண மயமாக 
காட்சியளித்தது ஆல்பம். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் 
எல்லோரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது 
கூடுதல்  சந்தோசமாக இருந்தது., புன்னகையும், மகிழ்ச்சியும், 
உற்சாக சிரிப்புமாக, வீடு கலை கட்டியது.

     பூபதி சி.டியை பிளேயரில் போட்டு ஹாலில் உள்ள பெரிய
எல்சிடி டிவியில் பார்க்க ஆரம்பித்தான்.சி.டி.ஓட ஆரம்பித்தபோது 
பூபதியின்  மனமும் திருமண வைபத்தை நோக்கிப் பயணித்தது.

     பூபதியின் அப்பா நவநீதம் திருப்பத்தூரில், சிறிய அளவில் நகை 
ஆசாரியாக, கடை ஒன்றை ஆரம்பித்தபோது அவர் திருமணம் கூட 
ஆகாத இளைஞராக இருந்தார். அவருடைய சிறிய கடையில் அவர் 
செய்யும், அழகிய டிசைன், தரம் இவற்றிர்க்காக படிப்படியாக
சுற்றுவட்டாரம் எங்கும்  அவருக்கு நகைத்தொழில் புகழ் சேர்த்துக் 
கொடுத்தது. அவருக்கு திருமணமாகியவுடன் சிறிது காலத்திலேயே
பூபதி பிறந்தான். நவநீதம், அவனுக்கு தனது தந்தை முத்துச்சாமி
நினைவாக முத்துச்சாமிபூபதி என்று பெயர் வைத்தார்.அவருடைய
சிறிய கடை, ஊரின் பிரதான கடை வீதிக்கு  இடம் பெயர்ந்தது. 
அவருக்கு அன்று பெரிய தொகை என்றாலும், சகாயவிலைக்குக் 
கிடைத்த சிறிய தார்சுகடையை விலைக்கு வாங்கி, முத்து 
ஜிவல்லர்ஸ் என்ற சொந்தமாகத் துவங்கினார்.

     பூபதிக்கு பிறகு, 11 வருடங்களுக்கு கழித்துத்தான் ராதிகா 
பிறந்தாள். எனவே ராதிகா வீட்டில் எல்லோருக்கும் செல்லம், 
அண்ணன் பூபதிக்கு ராதிகாவின் மீது அதிகம் பிரியம் . ராதிகாவை
குழந்தையாக இருந்த போது  தோளிலும், பிறகு மனதிலும் தூக்கி 
வைத்துக் கொண்டாடுவான். அப்பா, அம்மாவிற்கு சொல்லவே 
வேண்டியதில்லை, ராதிகா செல்ல மகளில்லை,  செல்வமகள், 
அவர்களுக்கு லெஷ்மியின் மறு உருவம்.பூபதி டிகிரி படித்தவுடன், 
அப்பாவுடைய கடைக்கு வந்து, எல்லாப் பொருப்புகளையும்  
கவனித்துக் கொண்டான் .அவன் பொருப்பாக கடையைக் கவனிக்க 
ஆரம்பித்த போது, சில வருடங்களிலேயே தொழில் அமோகமாக 
வளர்ந்தது,  கடையும் இரண்டடுக்கு மாடியாகப் புதுப்பிக்கப்பட்டு, 
கடையின் முன்பகுதியை அழகிய ஷோருமாகவும், நவநீதமும், 
பூபதியும் மாற்றியமைத்தனர். நவநீதத்தின் செல்வ வளம் 
அவருடைய கடை அழகிலும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, 
புதிதாகக் கட்டிய,  அவருடைய அழகிய பங்களா வீட்டிலும்
பளபளத்தது. 

     பூபதிக்கு சிறப்பான வகையில் திருமணம் நடத்தி வைத்தார்
நவநீதம்.  மருமகள் நல்ல படித்த பெண்ணாக, வசதியான 
குடும்பத்திலிருந்து எடுத்திருந்தார். மருமகள் சங்கீதாவும் கெட்டிக்காரி
ஆதலால், பெரும்பாலும் பாதி நேரமாவது நகைக் கடைக்குப் போய் 
ஒத்தாசை செய்வாள்.
 
     பூபதிக்கு தங்கை ராதிகா எப்படியோ அதே போல், ராதிகாவிற்கு
அண்ணன் மகள் சுமிக் ஷா செல்லம். ராதிகா படிப்பில் நல்ல 
கெட்டிக்காரி, அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, பி.இ யிலும்
சிறப்பான மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்த போது, அவளுடைய 
அழகுக்கு, படிப்புக்கு ஏற்ற வகையில் மாப்பிள்ளையை தேர்வு 
செய்து வைக்க வேண்டுமென்ற முயற்சிக்கு,ஒரு சில 
மாதங்களிலேயே பலன் கிடைத்தது. பெரிய சம்பளத்தில் நல்ல 
மாப்பிள்ளை சேலத்து சம்பத்தப்புரம் என அமைந்தது. மகளுடைய 
திருமணத்தை நவநீதம் பிரம்மாண்டமாக நடத்தினார். பூபதிக்கு
அவனுடைய திருமணத்தை விட தங்கை திருமணத்தை, ஒரு படி
.மேலாக பெரும் விழாவாக கொண்டாடும் ஆசையிருந்தது.
 திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பான முறையில் 
திட்டமிட்டு, மனமகன் வீட்டார் மெச்சும் வசம் செய்திருந்தான்.
நவநீதம் தனது ஒவ்வொரு பெரிய வாடிக்கையாரையும், விட்டுப்
போகாமல் அழைப்பு வைத்திருந்தார். இந்துக்களில் எல்லாத் 
தரப்பினரையும், ஏராளமான அவருடைய இஸ்லாமிய 
வாடிக்கையாளர்கள் எனவும், சுற்றி வர உள்ள எல்லா ஊர்களில் 
உள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்திருந்தார்.

     திருமண விழாவை அப்பா எதிர் பார்த்ததை விட பூபதி 
பிரம்மாதப்படுத்தியிருந்தான். காரைக்குடி பேமஸ் சமையல்காரர் 
மூர்த்தியினுடைய குரூப் அறுசுவை விருந்து, ஸ்வீட், ஐஸ்கிரீம்,
பாயாசம் என புக் பண்ணி முப்பது வெரைட்டி உள்ள சைவ 
உணவுகள் என, சாப்பிட்டவர்களை திக்குமுக்காட வைத்திருந்தான்.
மேடை அலங்காரம், விடியோ கவரேஜ் சிறப்பாக இருந்தது.

     திருமண நிகழ்வின் பிரம்மாதத்தில், ராதிகாவின் முகத்திலும்,
குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி முழுமையாக 
மின்னியது.

     அன்று புகைப்படங்களையும், ஹாலில் ஓடிய சி.டியைப் பார்க்கும்
போது, மீண்டும் அந்த மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.
நாளை வரப்போகும் ராதிகாவையும், மாப்பிள்ளை ரவியும்,
மாப்பிள்ளை வீட்டாரும், ஆல்பத்தை பார்க்கும் போது , ஆனந்தப் 
படுவார்கள் என்று நினைக்கும் போது பூபதி மனம் மலர்ந்தது.

     பூபதியின் கல்லூரி நண்பன் வேல்முருகன் திருமண 
வீடியோகிராபி செய்திருந்தான். புகைப்படமும் அவன் கம்பெனியே
செய்திருந்தது. வேல்முருகன் ஸ்டூடியோ காரைக்குடியில் புகழ் 
பெற்றிருந்தது. அவனே நேரில் தனது குரூப்புடன் திருமண 
கவரேஜை செய்திருந்தான்.  ராதிகாவின்  மாப்பிள்ளை வீட்டார் 
ஆல்பம், சி.டி-யை விட, நம் ஆல்பம், சி.டி சிறப்பாகவே நிச்சயம்
இருக்கும் என்றும் பூபதிக்கு நம்பிக்கையிருந்தது. பூபதியின் மன
ஓட்டத்தை தடை செய்தது சுபிக் ஷாவின் குரல்.  சுபிக் ஷா 
திடீரென்று "தாத்தா இந்தப் போட்டாவில், காணப் போன 
பட்டுப்புடவை" என்று சத்தமாகச் சொல்லி தாத்தாவிடம் 
காண்பித்தாள். சீர்வரிசையை எடுத்த போட்டாவில் அந்த 
பட்டுப்புடவை பளபளத்தது.நல்ல இளம் ஊதா கலர் பட்டுப்புடவை,
ராதிகாவிற்கு வாங்கிய மூன்று பட்டுப்புடவையில் திருமணப் 
பட்டுக்கு அடுத்தப் படியாக, ராதிகா பிரியப்பட்டு வாங்கிய புடவை
அது, தங்கச்சரிகைவேலைபாடுடன் புது டிசைனாக வந்திருந்தது, 
தள்ளுபடி போக திருபுவனத்தில் வாங்கியது விலை 24,000 ரூபாய். 
திருமண வரவேற்பில்  சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டார் 
பார்வையிடவும், உறவினர் பார்க்கவும் தனி அறையில் 
சீர்வரிசையுடன் பட்டுப்புடவைகளை தட்டில் தனித்தனியாக பிரித்து 
வைத்திருத்தார்கள். கொஞ்ச நேரத்தில அந்த இள ஊதா பட்டுப்புடவை திருட்டு போயிருந்தது. அது எப்படி திருடு 
போனது என்ற கவலையிலும், அதை நவநீதம் குடும்பத்தார் அந்த
விசேச நிகழ்வில், கும்பலில் வெளியே தெரியாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டியும் இருந்தது. திருமணத்தில் ஒரு கரும்புள்ளியாக 
அதை யாராலும் மறக்க முடியவில்லை, குடும்பத்தினருக்கு 
மட்டுமே ஏற்பட்ட மனக்கஷ்டமாகவும் அந்த சம்பவம் அமைந்தது.
அன்றே வேறு ஒரு பட்டுப்புடவையை ,அவசரமாக உள்ளூரில் 
வாங்கி வந்து பூபதி மறுநாளில் சிர் வரிசையில் 
வைத்திருந்ததையும், பூபதி சிரமப்பட்டு அச்சம்பவத்தை மறக்கவே 
நினைத்திருந்தான். .

     சுமிக் ஷாவின் நினைவூட்டலால் நவநீதத்தின் முகம் வாடியது,
பூபதியின் முகமும் தான். அழகிய முகத்தில் உள்ள கரும்புள்ளி 
மாதிரியான அந்த நிகழ்வை அனைவரும் மறக்கத்தான் 
நினைத்திந்தார்கள். நவநீதத்தின் முகவாட்டத்தைக் கண்ட பிறகு
ஆல்பத்தைப் பார்ப்பவர்களின் குரல் சற்று சுருதி குறைந்திருதது. 
 பூபதியும் ஏரக்குறைய அதே மனநிலையில் சிடியைப் பார்க்க 
ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் சீர்வரிசைக் காட்சி வீடியோவில்
வந்த போது உன்னிப்பாகப் அந்தப் பட்டுப்புடவைத் தட்டை உற்றுப்
 பார்த்தான். அப்படியே அந்த அறையிலிந்து வீடியோ நகர்ந்த போது,
சீர்வரிசையைப் பார்த்தவர்கள் அனைவரும் வெளியே போனதையும் 
கவனித்தான், கேமரா வெளியே நகர்ந்த போது, கடைசியாக ஒரு 
புர்கா போட்ட முஸ்லீம் பெண், நடுத்தர வயதிருக்கும் பெண் 
சீர்வரிசையை பார்க்க உள்ளே வந்தவள் எல்லோரும் வெளியேறிய
பின் நிற்கும் காட்சியோடு, கேமரா சிறிது சிறிதாக நகர்ந்து, அந்த 
அறைக்கு வெளிப்புறம் வந்து பார்வையாளர்களை நோக்கிய போது, 
வீடியோவின் ஒரு மூலையில் அந்த அறையின் கதவு திறப்பு 
மட்டும் தெரிந்தது. உற்றுப் பார்த்தால் கதவு திறப்பின் வழியாக
சீர்வரிசையில் வைத்திருந்த டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி 
தெரிந்தது. அதில் சில விநாடி சலனம் தெரிந்தது, பிறகு கேமரா 
நகர்வில் அந்தப் புர்காபெண்  வெளியே வருவது ஒரு விநாடி 
தெரிந்தது.  பிறகு கேமரா வேறு வேறு திசையில் திருமணத்தைக்
கவர் செய்து  கொண்டே போனது. பூபதிக்கு ஏதோ எச்சரிக்கை 
உணர்வு தோன்ற, வீடியோவின் நேரத்தைக் கவனித்தான்.
சட்டென்று பொறி தட்டியது போல், அந்த மூன்று நிமிடக்
காட்சியைப் பார்க்க, ரிவைண்ட் செய்தான், திரும்பவும் அதே
காட்சிகள், இந்த முறை கதவிடுக்கில் தெரிந்த டிரஸ்டிங் டேபிள் 
கண்ணாடியின் சலனத்தை மறுபடு பார்த்தான் , ஒன்றும் தெளிவாக 
மட்டுப்படவில்லை. மறுபடியும் ரீவைண்ட் செய்து ஸ்லோமோசனில்
பார்த்தான். டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை மட்டும் ஜூம் செய்து 
பார்த்தான். ஒரே விநாடியில் தெரிந்த அந்த காட்சியில், அந்த புர்கா 
பெண் குனிவதும், பட்டுப்புடவையை மடித்து லாவகமாக
புர்க்காவிற்குள் மறைப்பதையும், பிறகு வெளியே வருவதும் 
தெரிந்தது. அந்தப் பெண் முகத்தை ஜூம் செய்து பார்த்த போது 
தெரிந்தது, அந்தப் பெண் யாரென்று,  நிறைய நகைகளுடன் 
காட்சியளித்தாள் அவள், அவனுக்கு அவளை யார் என்று தெரிந்து 
விட்டது. அவர்கள் கடைக்கு அடிக்கடி நகைகள் செய்ய வரும் சவுதி
வாப்பாவின் மனைவி தான் அவள்.
 
     பூபதி படபடப்புடன், "அப்பா இங்கே வந்து பாருங்க" என்று உரத்த
குரலில் நவநீதத்தை அழைத்தான். நவநீதம் புகைப்படங்களை 
பார்த்துக் கொண்டிருந்தவர், பூபதியின் பரபரக்கும் குரலால் எழுந்து 
வந்தார். திரும்ப அந்தக் காட்சிகளை, அவன் பார்த்த முறையிலேயே
ஜூம் செய்து அவளுடைய புடவைத் திருட்டை, ஸ்லோமோசனில்
காண்பித்தான். நவநீதம் கவனித்துப் பார்த்தவுடன் துணுக்குற்றார். 
பூபதி சற்று கோபமாக , நவநீத்தைப் பார்த்து "பாருங்கப்பா, அந்தப் 
பணக்காரியின் சின்ன புத்தியை" என்று சினத்துடன் சொன்னான்.
"இவளை போலீசில் பிடித்துக் கொடுக்கனும் பா" என்று சீறினான்.

     நவநீதம் சலனமற்று சில விநாடிகள் நின்றார். பிறகு பூபதி பக்கம்
திரும்பி "அவளைத் தெரியுமப்பா, சவுதி வாப்பா சம்சாரம் 
சுலையா பீவி தான் அவள் என்றவர். சற்று நிதானித்து, கண்களை 
மூடித் திறந்துவிட்டு சொன்னார், அந்த சுலையா பீவி நல்ல
பணக்காரர் பெண், அவளுடைய இரண்டு மகள்களுக்கும் 
நூற்றுக்கணக்கான பவுன்நகைகள் செய்து வாங்கியிருக்கிறாள்.
இப்போது சவுதியில் வேலை செய்யும் அவளுடைய இரண்டு 
மகன்களும் இன்ஜினியர்களாக பெரிய வசதியுடன் இருக்கிறார்கள்,
அவர்களுடைய மனைவிக்கும் இவள் தான் ஏராளமான 
நகைகள்செய்துநம்மிடம் வாங்கியிருக்கிறாள், அவளுடைய 
சொந்தக்காரர்கள் பலருக்கும் நம்மிடம் அழைத்து வந்து நிறைய
நகைகள் செய்திருக்கிறாள். இந்தப்பட்டுப்புடவை தொகயைவிட 
பலமடங்கு லாபம் நமக்கு சுலையா பீவி மூலம் வந்துள்ளது. 
அது மட்டுமல்ல ஊரில் பெருவாரியான முஸ்லிம் மக்களும்
நம்முடைய வாடிக்கையாளர்கள் என்று சொன்னவர். சற்று 
உறுதியான குரலில் "அவளுடைய தரத்திற்கு உள்ள செயலை 
அவள் செய்யவில்லையம்பா, ஆனால் அவளுடைய இந்தப் 
பட்டுப்புடவை திருட்டு அவளது சில்லறை திருட்டுப் புத்தியைக் 
காட்டினாலும், இதைக் காட்டிக் கொடுப்பதால், அவள் சார்ந்த 
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவமானம் தான். 
அதனால், இந்த விசயத்தை யாருக்கும் தெரியாமல் விடுவதே 
நமக்கும், நம் வியாபாரத்திற்கும் அழகு. திருடுவது என்பது ஒரு 
குணக்கேடு, அது ஏழைகள் மட்டும் செய்வதாக நாம் நினைக்கிறோம், 
ஜாதி, மத பேதமில்லாமல் பலருக்கும் இந்த குணக்கேடு இருக்கும்.
அந்த வியாதி வசதியானவர்களுக்கும் வரக்கூடியதே, அவர்கள் 
தானாக ஒரு சந்தர்பத்தில் உணர்வார்கள்,இதோடு இதை விட்டு விடு 
பூபதி," என்றார். குடும்பத்தினரும் அதை புரிந்து கொண்ட 
மெளனத்தில் இருந்தார்கள்.

     பூபதி, நவநீதத்தின் வார்த்தையில் உள்ள பொருளைப் புரிந்து 
கொண்டபடியால், சில விநாடிகள் மௌனத்திற்கு பிறகு, அப்பா
சொல்வதே சரி என்று அவன் மனமும் சொன்னது, அமைதியாக
நவநீதத்தைப் பார்த்து "சரிப்பா" என்றான்.

Friday, August 12, 2016


                                      

            நூல் ஆய்வு: சேகு,   நூல் ஆசிரியர்: இலா.வின்சென்ட்,
            வெளியீடு  :பாரதி புத்தகாலயம், விலை:90/, பக்கங்கள்: 128

               சேலத்து எழுத்தாளர் இலா. வின்சென்ட் அவர்களுடைய இருட்டைத்  தின்றவர்கள் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் அனுபவம் அலாதியானது. இக்கதைகள் அத்தனையும் சேலம் சார்ந்த பகுதிகளில் நடப்பதாக அமைந்துள்ளதானது, இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது. இலா.வின்சென்ட் சிறுகதைகள்,கட்டுரைகள், ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதியவர். சேலம் த.மு.எ.க.சாவின் சாளரம் சிற்றிதழில் பொறுப்பாசிரியர். அந்த வகையில் அவருடைய அனுபவ நடை, இந்த நூலில் உள்ள சிறுகதைகளில் சிறப்பாக வந்திருக்கிறது. சிறுகதைக்கான களமும் சமூகத்தின்,எதார்த்தமான, அடிதட்டு மக்களுடைய பிரச்சனைகளைப் பேசுகின்றபடியால் இதில் உள்ள 12 கதைகளும், ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் நமது மனத்தை ஊடுருகின்றன. இந்த  கதைகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

             விதைகள் உறங்காது என்னும் சிறுகதை நம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பயங்கரவாதத்தை, சேலம் சிறையில் நிராயுதபாணியான கம்யூனிஸ்ட் தோழர்கள் 22பேரை, அரசியல் கைதிகளுக்கான உரிமையைக் கோரியதற்காக, சிறைத்துறை காட்டுமிராட்டிதனமாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி படுகொலை செய்ததன் பின்னணியில் நிகழ்வதாக  படைக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  மருந்து எனும் சிறுகதை துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை சுத்தம் செய்வர்களாக்கப்பட்டு, மனித உரிமை மறுக்கப்பட்டர்வளாகிய அவல  சூழலில் வாழும் சீரங்கனுக்கும், இத்தொழிலை வெறுக்கும்,சிறுமகள் கலையரசிக்குமான மனக்குமுறலை மையமாக வைத்து, நம் மனதில் குமுறலை ஏற்படுத்துகிறது.

           இலக்கணம் மாறுதோ எனும் சிறுகதை இறைவழிப்பாதையில் ஈடுபட்டும், மேரி எனும் எளிய ஆசிரியை தனது சுயநலத்திற்காக வேலையை விட்டு துரத்திடத் துடிக்கும் அமலா எனும் அருள் சாகோதரினுடைய, மோசமான மறுபக்கத்தைக் காட்டுகிறது. இந்தப் போரட்டத்தில் அடக்கு முறைக்கு உள்ளாகி இறுதியில் பொங்கி எழுந்து போராடும் மனுஷியாக நம் மனதில் ஆசிரியை மேரி உயர்ந்து நிற்கிறார்.

          இருட்டைத் தின்றவர்கள் சிறுகதை ஒரு காலனியில் வசிக்கும் எளியவர்களுடைய நிலத்தை, வீடுகளைத் தட்டி பறிக்கும் அரசியல் சூழ்ச்சியையும், அடக்குமுறையையும் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. விசாரணைக் கூண்டு சிறுகதை ஒரு பெண்ணின் மீது கணவனின் குடும்பம் நிகழ்த்தும் குடும்ப வன்முறையையும், அப்பெண்ணுடைய பலவிதமான கேள்விகளையும்,மனக்குமுறல்களையும் பேசுகிறது. ஒதுக்கல் எனும் சிறுகதை ஜாதி மறுப்பு திருமணம் செய்த தலித் பெண்ணுக்கு, மேல்ஜாதி கணவனுடைய வீட்டார், அவன் இறந்த ஈம சடங்களிலும் அவனுடைய சிறுவயது மகன்மீது காட்டும் ஆதிக்க வெறியைச் சொல்கிறது.  என்று தணியும் எனும் சிறுகதை ஒரு இஸ்லாமிய பெண்ணின் அவலத்தை,  சதி திட்டம் தீட்டி மாமியாக்காரி,மருமகளைப் பலிவாக்குவதற்காக நடத்தும் தலாக் நாடகமும் அதிலிருந்து கணவனை மீட்டுவரும் இளம்பெண் ஆயிஷாவின் போராட்டத்தைச் சொல்வதுடன், அடிதட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையையும் நம்முன் கொண்டு வருகிறது.

          மண்கரடு சிறுகதை இணக்கமாக வாழும் இந்து, முஸ்லீம் மக்களிடையே மதவாதிகள் தூவும் நச்சு விதைகளைச் சுட்டிக் காட்டுகிறது. கைநழுவி போனது எனும் சிறுகதை தன் கணவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி, சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற இலட்சியத்தால் தனி ஒருத்தியாக நின்று புதிய வீட்டைக் கட்டி முடிக்கும் இளம்பெண் மல்லிகாவினுடைய,பொறுப்புணர்ச்சியையும் அதற்காக அவள் இழந்த நிம்மதியையும், வலியையும், வெளிநாடு சென்று வேலை செய்து பிழைப்பவர்கள், சமூக அந்தஸ்து உயர்ந்தாலும், அவர்கள் தொலைத்த வாழ்க்கையையும் சொல்கிறது.
   
       இத்தகைய பல உறவுகள் நமக்கும் வாய்த்து இருப்பதால், நம் மனமும் கனத்து போகிறது. இது தவிர்த்து ஒவ்வொரு சிறுகதையும் ஒரு போராட்டத்தை, வைராக்யத்தை நம்முன் நிறுத்துவதாகவும்,  இருப்பதால்அனைத்து சிறுகதைகளும் நம்மை ஆட்கொள்கின்றன.  நூலாசிரியரின் அற்புதப் படைப்பாற்றல்,ஒவ்வொரு சிறுகதையிலும் நம் மனக்கண்ணில் காட்சிகளாக, கேள்விகளாக, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கதை மாந்தர்களுடன் நெருக்கமனவர்களாக நம்மை கொண்டு வருவதில்  நூலாசிரியர் இலா.வின்சென்ட்  வெற்றியடைகிறார். இந்தச் சிறுகதை தொகுப்பு நிச்சயமாக வாசகனுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதனால், இந்நூல் வாசிக்கப்படவேண்டிய ஒரு நல்ல  சிறுகதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன்.