Tuesday, November 05, 2013
Tuesday, June 19, 2012
அஜித் வைஷ்ணவி திருமணம்
அஜித் வைஷ்ணவி திருமணம்
------------------------------------
நம் தேசத்தில் வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்று இரண்டு விஷயங்களை வாழ்க்கையில் கடினமான பணி என்று குறிப்பிடுவர். அஜித் வைஷ்ணவி திருமணம்.,திருமணத்தை எவ்வளவு எளிமையாக சிக்கனமாக செய்யவேண்டும்மென்பதற்கு எடுத்துக்காட்டாக 01.06.12 அன்று நடைபெற்றது. அஜித் எனது நெருக்கிய நண்பர் சஹஸ்ரநாமத்தின் மகன். என்வே அஜித்தை எனக்கு பள்ளி நாட்களிலிருந்தே நண்கு தொ¢யும். பழகுவதற்கு இனிய பிள்ளையாயிருந்து வ்ள்ர்ந்து இளைஞ்ராகி இன்று அறிவியல், சோசலிஷம்,அரசியல் என பல விஷ்யங்களில் வி¡¢வான விவாதம் செய்யுமளவிற்கு வாசிப்பு உள்ளவர் .அஜித் தற்போது ஜெர்மனியில் பிரைபர்க் யுனிவர்சிட்டியில் PHDபயின்று கொண்டே பனியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அஜித் தனது விருப்பத்திற்கு¡¢ய துணைவி வைஷ்ணவியை திருமணம் செய்வதாக அறிவிந்தது, பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றது என்ற விஷயங்களோடு நில்லாமல், தனது கொள்கையின் அடிப்படையில் மாலை, தாலி, விருந்து, ஆடம்பரமற்ற திருமணமாக தனது திருமணம் இருக்க வேண்டும்மென்பதில் உருதியாக இருந்ததும் வைஷ்ணவி வீட்டாரையும் திறம்பட பேசி சம்மதிக்க வைத்ததும், எங்கள் நட்பு வட்டாரத்தில் ஆச்சர்யமாக அலசப்பட்ட விஷயமாக இருந்தது. . திருமணம் என்ற பெயா¢ல் நடைபெறும்(ஆடம்பர)செலவுகளின் போ¢ல் சஹஸிற்கும் அவர் துணைவியார் சசிகலாவிற்கும் எப்போதும் உடன்பாடில்லை. அவர்களுடைய திருமணம் கூட இருவரும் விரும்பி மணந்துகொண்ட காதல் திருமணம்தான். பத்தாண்டுகளுக்கு முன்பே சஹஸ¤ம், அஜித்தும் விளையாட்டாக சொன்னது நினைவிற்கு வந்தது- "பொ¢ய விருந்து கிடையாது, ஆடம்பரமற்ற திருமணம், ம்று நாளில் திருமணம் முடிந்தது என்று தீக்கதி¡¢ல் அறிவிப்பு "என்ற முடிவு, காலத்தை வென்று கனவாக இருந்தது, இன்று நினைவாகியது என்று குறிப்பிட்டால் மிகையில்லை. பொ¢ய விருந்து, ஆடம்பர திருமணம் என்று தங்களது பல வருட சேமிப்புகளை காலிசெய்து விட்டு, கடன் பல வாங்குபவர்கள் திருந்த நல்ல உதாரணம் வேண்டுமே. அவர்களுக்கு அஜித் திருமணம் நிச்சியமாக ஒரு உதாரனமே.
அஜித், திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து யாரையும் அழைக்கவி¢ல்லை, மிகக்குறைந்த அளவில் , சில நண்பர்கள்,அண்டை வீட்டார் ,என அழைதிதிருந்தனர். திருமணத்திற்கு வந்த இருபது பேரும் தமிழ்ச்சங்க செயலாளர் க.வை.தலைமையில் திருமணம் நடைபெற்றதை பார்க்க வந்துள்ள பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். திருமண அறிவிப்பிற்கு பிறகு நேராக திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகம் சென்றோம். (சோதிட) நேரம், காலம் பார்க்கவில்லையாதாலால் ,அங்கு நல்ல நேரத்தில் மட்டும் குவியும் கூட்டமுமில்லை.,அப்பொழுதில் பதிவு செய்ய வந்த ஒரே தம்பதியினர் அஜித்-வைஷ்ணவி மட்டுமே. அலுவலகத்தில் ஒரு மணிநேரத்தில் பதிவு செய்து அனுப்பிவிட்டார்கள். சார்பதிவாளர் அலுவலகத்தில் சம்திங் சம்திங் எதுமில்லை . கேட்டால் நானே மறியல் செய்வேன் என்று சொல்லி வந்த மாப்பிள்ளை அஜித்துக்கு நல்ல வேலை அங்கு யாரும் வேலை வைக்கவில்லை.வந்திருந்தவர்கள் அன்னபூரானா ஹோட்டலில் மதிய உணவருந்த இனிதே முடிவுற்றது. காலை 30 பேர், மதியம் 50 பேர் சாப்பிட்ட இந்த விருத்துக்கான செலவை நீங்களே கூட்டிக்கழித்துப்பாருங்கள், பிறந்த நாள் விழாவைவிட குறைவாக வரும்.
இனி நாமும் நம் குடும்பத்திலும் இது போன்ற சிக்கனத்திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று, வழிகாட்டிய அஜித்திற்கும்-வைஷ்ணவிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வேமே.
thanks-saalram.
Saturday, October 29, 2011
ஏழாம் அறிவு எனும் மோசடி
ஏழாம் அறிவு எனும் மோசடி
___________________________
ஏழாம் அறிவு திரைப்படம் ஒரு பகட்டான மோசடியே !,தமிழகத் திலுருந்துதான் உலகிற்கே தற்காப்புக்கலை , நோக்குவர்வம் எனும் வசியக்கலை என உலகிற்கே ஏற்றுமதியாகி இருக்கிறது என்பது தமிழரை
புகழ்ந்தது ஏமாற்றும் பசப்புக் கலையே !,அதிலும் நோக்கு வர்மம் என்பது சாத்தியமற்ற அபத்தத்திலும் அபத்தம் ,இந்த பொய்யை பரப்ப ஐந்து ,ஆறு அறிவு பத்தாதென்று ஏழாம் அறிவாம்!! இதை வைத்துத்தான் ஒட்டுமொத்த படத்திலும்
வித்தை காட்டப்பட்டுள்ளது,இப்படி ரிமோட்டாக ஒரு மனிதனை மாற்றி கொலை, தற்கொலை ,அதுவும் வினாடி நேரத்தில் கொல்வதென்றால் அணு குண்டே தேவையில்லையே ?
எகாதிபத்தியத்திற்கு அதன் போக்கிலேயே போய் குறைந்த விலையில் உற்பத்தி ,அதிக வியாபாரம் எனும் தந்திரத்தில் பதிலடி கொடுப்பதால் ,சீனாவுடன் போட்டி போடுவது என்பது சகிக்க முடியாத பாதகம் தான்,எனவே அதன் எடுபிடிகளுக்கும் அதனை சகிக்க முடியாதுதான்.!இதன் பக்க வாதமே ஏழாம் அறிவு எனும் மோசடி. அண்டை நாட்டுடன் நல்லுறவு என்பது ஏகாத்திபத்திய ஆயுத வியாபாரிகளுக்கு பிடிக்காத விஷயம் ,இது ஏழாம் அறிவில் விஷமாக கக்கப்பட்டுள்ளது.
Friday, September 23, 2011
இன்னொரு தேர்தல் ..
இன்னொரு தேர்தல்
---------------------------------
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும்,நகரங்களிலும்,பெருநகரங்களிலும்,சாலை குண்டும் குழியுமாக பல பத்தாண்டுகளாக விடியலுக்காக ஏங்கிகொட்டுருக்கின்றன, தமிழ் மக்கள் மழைகாலங்களில் எருமைகள் போலவும்,சாலைகள் குட்டைகளைப்போலவும் இருக்கின்றன , மழையற்ற வெயில் காலங்களில் கழுதைகளைப் போல சகிப்புத்தன்மை வாய்ந்தவர்களாக ,வாழ்வை பொதி போல சுமந்து பழகி, திரிந்து கொண்டிருக்கிறார்கள், மீதமுள்ள "குடிமக்கள் "தெருவோரங்களில் சாய்ந்தி கிடக்கிறார்கள்,போதை தெளிந்தவுடன் மீதம் இருக்கும் கால் காசை வீட்டிற்க் கொண்டு போக, மக்கள் கோரிக்கைகளுக்காக யாராவது போராடினால் நாயைப்போல அடிக்கப்படுகிறார்கள்,இவர்களை அடிக்கும் மாபாதகர்களோ காஞ்சி போட்ட உடுப்போடு, இவர்கள் நமக்காகவும் தான் போராடுகிறார்கள் என்ற எவ்வித பிரஞ்சையுமின்றி பிணங்கள் போல விறைப்பாக திரிய பழகிப் போய்,காவலாய் வளம் வருகிறார்கள் , தமிழ்நாடு இன்னொரு தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது...,மனமுடிததவடன்அடுத்தநாள் , தாலியறுக்கும் அரவான் திருவிழா தான் ஞாபகத்துக்கு வருகிறது....
Thursday, September 01, 2011
செங்கொடி
செங்கொடி,
உயரப் பறந்து,
உலகை வெல்ல
புறப்படவேண்டியவள் நீ!
மண்ணெண்ணெயில் பொசுங்கி
மடிந்து நீ போகலாமா?
சாம்பலிலிருந்து
பீனிக்ஸ் பறவையாய் வா
என்று சங்க நாதம் பேசுபவர்களுக்கு
மத்தியில்,நீ வாழ்ந்திருந்தால்
நிறைய சாதித் திருப்பாயே
என்று எண்ணத்தோன்றுகிறது
ஒரு சகோதரனாய் ...
உயரப் பறந்து,
உலகை வெல்ல
புறப்படவேண்டியவள் நீ!
மண்ணெண்ணெயில் பொசுங்கி
மடிந்து நீ போகலாமா?
சாம்பலிலிருந்து
பீனிக்ஸ் பறவையாய் வா
என்று சங்க நாதம் பேசுபவர்களுக்கு
மத்தியில்,நீ வாழ்ந்திருந்தால்
நிறைய சாதித் திருப்பாயே
என்று எண்ணத்தோன்றுகிறது
ஒரு சகோதரனாய் ...
மரணதண்டனை
மரணதண்டனை
---------------------------
மனித மாண்புகள்
ஆயிரம் ஆண்டுகள்
பின்னோக்கியே இருக்கிறது,
ஒவ்வொரு புதிய
மரணதண்டனையை நிறைவேற்ற
கயிறுகள் இறுக்கப்ப்படும்போதும் ...
---------------------------
மனித மாண்புகள்
ஆயிரம் ஆண்டுகள்
பின்னோக்கியே இருக்கிறது,
ஒவ்வொரு புதிய
மரணதண்டனையை நிறைவேற்ற
கயிறுகள் இறுக்கப்ப்படும்போதும் ...
Thursday, June 30, 2011
அவன் -இவன் - இதில் பாலா எவன்?
அவன் -இவன் -
-----------------------------------
நகைச்சுவை என்ற பெயரில் இம்சித்த பின்னால் ,புதுமை வேண்டுமே ! முக்கால் வாசி படம் கடந்தபின் வில்லன் வருகிறான் , வில்லன் திடீரென்று வருவதில் தப்பொன்று மில்லைதான் ,திடீரென வரும் வில்லன் அடிமாடுகளை விற்கும் பயங்கர வில்லன் !, அடிமாடுகளை அரசிடம் பிடித்துக் கொடுக்கும் ஜமீன்தாரை,கசாப்புக்கடைக்காரனுக்கு கருணை இருக்காது என்ற மாமுல் பார்முலாவில்,- ஜமீன்தாரை நிர்வாணமாக்கி அடித்து படுகொலை செய்து சாகடித்துவிட்டு , பின் கதாநாயகர்களால் வில்லன் சம்காரம் செய்யப்பட்டு ,உயிரோடு ,இறந்த ஜமீன்தாரின் சிதையில் கொழுத்தப்பட்டு என களேபரமாக ஒருவழியாக படம் முடிகிறது.
கைவிலங்கிட்டு கொண்டு போகப்படுவதேன்? ப்ளு கிராஸ் காரர்கள் ,உயர் அதிகாரிகளால் கைது செய்யப்படும் காட்சிகள் ,பாலாவால் மியுட் செய்யப்பட்டுள்ளது
கேள்விகளுடன்
பாலாவின் இயக்கத்தில் ,சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ,என தமிழ் திரைப்படங்களில் இதுவரை பேசப்படாத சமுகத்தில், விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய நுணுக்கமான பதிவுகளை பார்த்திருக் கிறோம் ., பல வகைகளில்
நம் மனதை பாதித்த நல்ல, இவரின் படைப்புகளை பார்த்திருந்த நமக்கு அவன்-இவன் வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை .பாலாவே சொன்னது போல இதை பொழுது போக்கு படம் என்பதனையும் மீறி
ஏற்படுத்தும் உனைவுகள் ,பகிரப்படவேண்டியவை களாகவே கருதுகிறேன் .சமகத்தில் குற்ற பரம்பரை என புறந்தள்ளப்பட்ட மனிதர்களைப் பற்றிய பதிவு என்பதனைத்தவிர நல்லதாக சொல்ல எதுவுமே இல்லை அவன்-இவனில் ,விரச நகைச்சுவை ,அபத்தங்கள், இவற்றை மீறி பார்வையாளனுக்கு பாலா தரும் செய்தியில் தொக்கி நிற்பது என்ன ?
வாழ்ந்துகெட்ட ஜமீந்தார் சேரியில் வாழும் ஏழை சிறு குற்ற வாளிகளுடனுனான தந்தை ,பிள்ளை யாய் நட்பு கொள்ளும் , அசாதரணமான மனிதர் ,(இந்த பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ள குமாரின் நல்ல நடிப்பு பாராட்ட படவேண்டிய தென்றாலும் பாத்திரப்படைப்பு காரணமாக வெறுப்பேற்றுகிறது.)மசாலா படத்தில் வரும நகைச்சுவை போலிஸ் பாத்திரங்களும் இங்கும், தாரளமாக பயன்படுத்தட்ட பட்டிருக்கின்றன.
வில்லன் அடிமாடுகளை வியாபாரம செய்வது பாவமான செயலாம்! ,தகுந்த லைசென்ஸ் எடுக்கப் படாமல் வியாபாரம் செய்யும் சப்பை காரனத்தவிர ,இவர் பயங்கர வில்லனாக வர காரணங்கள் என்ன ?
கோழி சப்பையை ருசித்து சாப்பிட்டு ,எந்த நேரமும் உயர் சாராயத்தை குடித்துக் கொண்டும், ஏழை நண்பர்களுக்கு ,தாரளமாக கொடுத்துக் கொண்டிருக்கும் தத்து பித்து ஜமீந்தார், உள்ளத்தில் நல்லவராம்!, சரி போகட்டும். வில்லனுடைய கேள்வியாக படத்தில் வரும் கேள்வியான "அடிபாடுகளை சாப்பிடுபவர்களை போய் கேட்க வேண்டியது தானே? குர்பானியாய் ஒட்டகங்களை கொடுப்பவர்களை போய் கேட்க்கவேண்டியத்டுதானே" ! என்ற கேள்விகளின் வாயிலாக என்ன சொல்ல வருகிறிர்கள்? பாலா? ..
அடிபாடுகளை உண்ணும் தலித், சிறுபான்மை மக்கள் ,மரியாதிக்குரியவர்களில்லை என்பது என்ன இசம் பாலா? உழைத்து ஏராளமான உடல் சக்தியை இழந்த ஏழை மக்களை,உயிர் வளர்க்க உணவாக , மாடு,நத்தை ,கோழி ,எலி ஈசல், என பலவற்றையும் சாப்பிடும் சாதாரண மக்களை, பார்த்து நீங்கள் கேட்க்கும் கேள்விதான் என்ன? நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளை மனித நேயத்தோடு பார்க்கும் உங்களால் ,தலித், சிறுபான்மை மக்களை பார்க்க முடியாமல் எது மாற்றியுள்ளது?இறந்த மாட்டிறச்சியை சாப்பிட்ட தற்காக சஜ்ஜாரில் கொல்லப்பட்ட ஐந்து தலித் மக்களை கொன்றவர்களின் ,பார்வை கோளாறு உங்களுக்கும் ஏற்பட்டுவிட்டதா ? அவன் - இன்னில், நீங்கள் எவன்?
தங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகள், அடுத்த திரைப்படங்களில் மதமாச்சர்யங்க்களை கடந்தது வரவேண்டுமென ஆவலுடன் ...
- இப்படிக்கு,
திரைப்படத்தை பத்து நாட்களுக்கு முன்பாக பார்த்து விட்டாலும்
உங்கள் ரசிகன்.
Subscribe to:
Posts (Atom)
