Thursday, June 30, 2011

அவன் -இவன் - இதில் பாலா எவன்?




அவன் -இவன் -

இதில் பாலா எவன்?
-----------------------------------
பாலாவின் இயக்கத்தில் ,சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ,என தமிழ் திரைப்படங்களில் இதுவரை பேசப்படாத சமுகத்தில், விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய நுணுக்கமான பதிவுகளை பார்த்திருக் கிறோம் ., பல வகைகளில்
நம் மனதை பாதித்த நல்ல, இவரின் படைப்புகளை பார்த்திருந்த நமக்கு அவன்-இவன் வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை .பாலாவே சொன்னது போல இதை பொழுது போக்கு படம் என்பதனையும் மீறி
ஏற்படுத்தும் உனைவுகள் ,பகிரப்படவேண்டியவை களாகவே கருதுகிறேன் .சமகத்தில் குற்ற பரம்பரை என புறந்தள்ளப்பட்ட மனிதர்களைப் பற்றிய பதிவு என்பதனைத்தவிர நல்லதாக சொல்ல எதுவுமே இல்லை அவன்-இவனில் ,விரச நகைச்சுவை ,அபத்தங்கள், இவற்றை மீறி பார்வையாளனுக்கு பாலா தரும் செய்தியில் தொக்கி நிற்பது என்ன ?

வாழ்ந்துகெட்ட ஜமீந்தார் சேரியில் வாழும் ஏழை சிறு குற்ற வாளிகளுடனுனான தந்தை ,பிள்ளை யாய் நட்பு கொள்ளும் , அசாதரணமான மனிதர் ,(இந்த பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ள குமாரின் நல்ல நடிப்பு பாராட்ட படவேண்டிய தென்றாலும் பாத்திரப்படைப்பு காரணமாக வெறுப்பேற்றுகிறது.)மசாலா படத்தில் வரும நகைச்சுவை போலிஸ் பாத்திரங்களும் இங்கும், தாரளமாக பயன்படுத்தட்ட பட்டிருக்கின்றன.

நகைச்சுவை என்ற பெயரில் இம்சித்த பின்னால் ,
புதுமை வேண்டுமே ! முக்கால் வாசி படம் கடந்தபின் வில்லன் வருகிறான் , வில்லன் திடீரென்று வருவதில் தப்பொன்று மில்லைதான் ,திடீரென வரும் வில்லன் அடிமாடுகளை விற்கும் பயங்கர வில்லன் !, அடிமாடுகளை அரசிடம் பிடித்துக் கொடுக்கும் ஜமீன்தாரை,கசாப்புக்கடைக்காரனுக்கு கருணை இருக்காது என்ற மாமுல் பார்முலாவில்,-
ஜமீன்தாரை நிர்வாணமாக்கி அடித்து படுகொலை செய்து சாகடித்துவிட்டு , பின் கதாநாயகர்களால் வில்லன் சம்காரம் செய்யப்பட்டு ,உயிரோடு ,இறந்த ஜமீன்தாரின் சிதையில் கொழுத்தப்பட்டு என களேபரமாக ஒருவழியாக படம் முடிகிறது.




வில்லன் அடிமாடுகளை வியாபாரம செய்வது பாவமான செயலாம்! ,தகுந்த லைசென்ஸ் எடுக்கப் படாமல் வியாபாரம் செய்யும் சப்பை காரனத்தவிர ,இவர் பயங்கர வில்லனாக வர காரணங்கள் என்ன ?
கைவிலங்கிட்டு கொண்டு போகப்படுவதேன்?
ப்ளு கிராஸ் காரர்கள் ,உயர் அதிகாரிகளால் கைது செய்யப்படும் காட்சிகள் ,பாலாவால் மியுட் செய்யப்பட்டுள்ளது

கோழி சப்பையை ருசித்து சாப்பிட்டு ,எந்த நேரமும் உயர் சாராயத்தை குடித்துக் கொண்டும், ஏழை நண்பர்களுக்கு ,தாரளமாக கொடுத்துக் கொண்டிருக்கும் தத்து பித்து ஜமீந்தார், உள்ளத்தில் நல்லவராம்!, சரி போகட்டும். வில்லனுடைய கேள்வியாக படத்தில் வரும் கேள்வியான "அடிபாடுகளை சாப்பிடுபவர்களை போய் கேட்க வேண்டியது தானே? குர்பானியாய் ஒட்டகங்களை கொடுப்பவர்களை போய் கேட்க்கவேண்டியத்டுதானே" ! என்ற கேள்விகளின் வாயிலாக என்ன சொல்ல வருகிறிர்கள்? பாலா? ..

அடிபாடுகளை உண்ணும் தலித், சிறுபான்மை மக்கள் ,மரியாதிக்குரியவர்களில்லை என்பது என்ன இசம் பாலா? உழைத்து ஏராளமான உடல் சக்தியை இழந்த ஏழை மக்களை,உயிர் வளர்க்க உணவாக , மாடு,நத்தை ,கோழி ,எலி ஈசல், என பலவற்றையும் சாப்பிடும் சாதாரண மக்களை,
பார்த்து நீங்கள் கேட்க்கும் கேள்விதான் என்ன? நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளை மனித நேயத்தோடு பார்க்கும் உங்களால் ,தலித், சிறுபான்மை மக்களை பார்க்க முடியாமல் எது மாற்றியுள்ளது?இறந்த மாட்டிறச்சியை சாப்பிட்ட தற்காக சஜ்ஜாரில் கொல்லப்பட்ட ஐந்து தலித் மக்களை கொன்றவர்களின் ,பார்வை கோளாறு உங்களுக்கும்
ஏற்பட்டுவிட்டதா ? அவன் - இன்னில், நீங்கள் எவன்?

தங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகள், அடுத்த திரைப்படங்களில் மதமாச்சர்யங்க்களை கடந்தது வரவேண்டுமென ஆவலுடன் ...
- இப்படிக்கு,
திரைப்படத்தை பத்து நாட்களுக்கு முன்பாக பார்த்து விட்டாலும்
கேள்விகளுடன்
உங்கள் ரசிகன்.

No comments: