Tuesday, June 26, 2018

மார்க்ஸ் - 200

பாலம் வாசகர் சந்திப்பில் 06.05.18 அன்று -மார்க்ஸ் 200 :  பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாக மேரி
காப்ரியலின் - " காதலும் மூலதனமும் " ( Love and Capital)எனும் நூலை சஹஸ் அறிமுகப்படுத்தினார்.

மார்க்சியத்தை தெரிந்துகொள்ள ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.மார்க்சின் வாழ்க்கையையும் ,மார்க்ஸ் எனும் இரத்தமும் சதையுமான மனிதர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை மிகச் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கும் நூலாக ,இந்நூலை,சஹஸ் குறிப்பிடுகிறார் .
புத்திசாலித்தனமும் ,முரட்டுத்தனத்தையும் ஒருங்கே பெற்றிருந்த மார்க்ஸின் இளமைப் பருவத்தில்,காதலியாய் ,மனைவியாய் ஜெனி அவர் வாழ்வில் இணைந்தார். பின்பான, ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கைத் துணையாக, மட்டுமல்லாமல் அவருடைய எழுத்துப்பணியில் ஊக்குவிக்கும் அறிவு ஜீவியாக ஜென்னி திகழ்ந்தார்.இளைஞர்களாக சந்தித்த மார்க்சும், எங்கெல்சும் ,வாழ் நாள் முழுவதற்குமான நண்பர்களாய் பரிணமித்தனர்.ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் என தனது புரட்சிகர தத்துவத்தால், அதிகார வர்க்கத்தால் மார்க்ஸ் துரத்தப்பட்டதால், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார் எக்கல்ஸ். அவரது மூலதனம் எனும் நூலை எழுதிட எடுத்துக் கொண்ட இருபதாண்டு காலத்திற்கு மேலாக, எங்கல்சின் பொருளதவியினாலேயே,
வறுமையுடன் போராடிய மார்க்சினால் குடும்பத்தை நடத்த முடிந்தது. மார்க்ஸைப் போலவே அறிவுஜீவிகளான , அவருடைய மகள்களான, ஜென்னிசன், லாரா, எலனார் ஆகியோரின் வாழ்வின் போராட்டங்களையும், தாதியாக வந்துஅவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக சிரமங்களை விரும்பத்துடன் வாழ்ந்த ஹெலன்
 டெமூத், என இந்த அனைவருடைய பங்களிப்புமே மார்க்சை வாழ்வில்,தூணாக தாங்கிப் பிடித்தன.
போராட்டமே வாழ்க்கையாக தெரிந்தே தேர்ந்தெடுத்த படியால், மார்க்ஸ், வாழ்வதற்கே ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தியதை அவருடைய கடிதங்கள், அவருக்கு வந்த கடிதங்கள், அவர் காலத்தில் அவரைப் பற்றி நண்பர்கள், மற்றவர்கள், எழுதியவற்றிலிருந்து , நிஜ மார்க்சை, நூலாசிரியர் நம் முன் கொண்டு வருவதில் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதை சஹஸ் வியந்து பாராட்டினார்.

 மூலதனத்தின் முதல் பகுதியை வெளியிட்ட போது மார்க்சுக்கு சிறிது நிம்மதி கிடைத்ததா என்றால் இல்லை. ,ஜென்னி யுடைய மறைவு, மூத்த மகளுடைய மறைவின் வலி, என மார்க்சின் உடல் மேலும் நலிவுற்று மறைந்தார் எனும் நூலின்  பகுதியை  கூறும் போது சஹஸின் குரல்தளுந்தளுத்தது, பங்கேற்றோர் உளமும் நெகிழ்ந்தன. 600 பக்கங்களுடைய இந்த நூல், சிறப்பாக , மிக நீண்ட ஆய்வுகளுடன்,  ஏராளமான தரவுகளுடன் , நுட்பமாக வருட வாரியாக,படைக்கப்பட்டுள்ள விதத்தையும் சஹஸ் தனது உரை நெடுகிலும் குறிப்பிட்டார். . 

கூடுதலான எண்ணிக்கையில் வந்திருந்த வாசகர்கள் , விவாதத்திலும் பங்கேற்றனர்.

3 comments:

அசடன் பாலாஜி said...

இப்புத்தகம் தமிழில் கிடைக்கிறதா?

அசடன் பாலாஜி said...

இப்புத்தகம் தமிழில் கிடைக்கிறதா?

சேகு said...

இல்லை. இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை.