பங்கு சந்தை வீழ்ச்சியும், இன்டர்நெட் செக்ஸ் டாக்டரும்.
பங்குச்சந்தை சற்று மேலே போகிறது, இல்லாவிட்டால் படுவீழ்ச்சியை மீண்டும் சந்திக்கிறது. இப்படியாக .,2015ல் இந்திய பங்குச் சந்தை இரண்டு இலட்சம் கோடிக்கு மேலும் சீனபங்குச்சந்தை ஏழு இலட்சம் கோடியும் வீழ்ச்சியடைந்தது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது சிறுமுதலீட்டாளர்கள்தான் இப்போதும்…
- - - - - - - - - =------------
2001ம் ஆண்டு ,என்று நினைக்கிறேன்,என்னுடைய அத்தை பெண்ணுடைய கணவர்,ஆர்த்தோ எம்.எஸ், மருத்துவக் கல்லூரி பேராசிரியர். ஒரு குடும்ப நிகழ்ச்சியில், அவர் என்னிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்த தருணத்தில், என்னிடம் இதை கேட்டப்போது திடுக்கிட்டு போனேன். அவர்
கேட்ட கேள்வி " நீ இன்டர்நெட் செக்ஸ் டாக்டரிடம் ஏமாந்து விட்டாய் "என்று சொன்னதுதான். ஒருவினாடியில் மனதில் பல விஷயங்கள் ஓடின. நான் சாதாரண செக்ஸ் சித்த வைத்தியரிடம்,லேகியம் கூட வாங்கி சாப்பிட்டதில்லையே! இந்த போடு போட்டுவிட்டாரே!இன்டர்நெட் செக்ஸ் டாக்டருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?. பேப்பரில் இ.செ. டா வுடைய லீலைகள் அரங்கேரிக்கொண்டிருந்த காலம் அது. இந்தியாவிற்கே புதுமையான ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் டாக்டர் பிரகாஷ். அவர்இன்டர்நெட் வந்த புதிதான அந்த காலத்தில்,இங்கிருந்தும் அதை வேறுவிதமாக பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கையில்இருந்திருக்கிறார்..இந்தியாவிலி ருந்து ஆபாசப் படங்களை எடுத்து வெளிநாட்டிலிருந்த ஒருவர் மூலம் பதிவேற்றி , நம் நாட்டிலிருந்து ,புது மாதிரியான சேட்டையை (சேவையை!) செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
கேட்ட கேள்வி " நீ இன்டர்நெட் செக்ஸ் டாக்டரிடம் ஏமாந்து விட்டாய் "என்று சொன்னதுதான். ஒருவினாடியில் மனதில் பல விஷயங்கள் ஓடின. நான் சாதாரண செக்ஸ் சித்த வைத்தியரிடம்,லேகியம் கூட வாங்கி சாப்பிட்டதில்லையே! இந்த போடு போட்டுவிட்டாரே!இன்டர்நெட் செக்ஸ் டாக்டருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?. பேப்பரில் இ.செ. டா வுடைய லீலைகள் அரங்கேரிக்கொண்டிருந்த காலம் அது. இந்தியாவிற்கே புதுமையான ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் டாக்டர் பிரகாஷ். அவர்இன்டர்நெட் வந்த புதிதான அந்த காலத்தில்,இங்கிருந்தும் அதை வேறுவிதமாக பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கையில்இருந்திருக்கிறார்..இந்தியாவிலி
அதோடு அந்த புகார்களால், போலீஸாரின் கடும் விசாரணையின் பின்னனியில், அவருடைய விஷயம் (விஷமம்!) அப்போதைய பத்திரிகைகளில், முழுமையாக ஆக்கிரமத்துக் கொண்டது., நீன்ட விசாரனைக்குப் பின்,நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 'வேறு சில குற்றங்களுக்காக , இன்னும் சிலஆண்டு சிறை தண்டனையும் அளித்தது.,சிறைச்சாலை அவரை ஆவலுடன் விழுங்கிக் கொண்டது.
தினசரி நாளிதழ்களில் வந்த அவருடைய் ஆடம்பர பங்களாக்கள், சொகுசு பங்களாக்கள்,ஆபாச அபத்தங்கள் , பலாத்காரங்கள், பற்றி செய்திகள் ஒரு வழியாக கால வெள்ளத்தில்,மறைந்தது..
சரி இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?.மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போல?!என்ற வினாவிற்கு, என் உறவினரான டாக்டர்,சிறுபுன்னகையுடன், என்னிடம் சொன்னவிஷயங்கள்ஆச்சர்யக்குறியாக நிமர்த்தியும், கேள்விக்குறியாக ,வளைத்துமிட் டன. டாக்டர் பிரகாஷ் ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்!(எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்).அந்த வகையில்,அவரைஎங்கள் டாக்டர்அறிந்திருந்தார்.ஆனால் கூடுதலாக ஒருவிஷயத்தையும் அவர்எனக்குவெளிச்சமாக்கினார். 6 வருடத்திற்கு முன்பு,நான்பங்கு சந்தையில், இன்னோவேசன் மெடி எனும் நிறுவனத்தில், சிறு அளவில் முதலீடு செய்திருந்ததை அவரிடம் சொல்லியிருந்தேன்,ஹர்சத் மேத்தா ஊதிப் பெரிதாகி இருந்த நேரத்தில் ,நான் இன்னோவேசன் மெடி என்ற ஒரு மருத்துவ சாதனங்கள் விற்கும் கம்பெனியில், மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று,எனக்கு தெரிந்த பங்குச்சந்தை நிபுணர்! சிபாரிசு செய்தார்.(என்னிலும்,இளையவர்,அவ ரும் இந்த துறைக்கு புதியவரே ) அவர்அந்தநிறுவனம்,இந்தியாவில்,ந வீனமுறையில்,விலையுயர்ந்தஸ்டீலி ல்,புதிதாகபந்துகிண்ணமூட்டுதயா ரிக்கும் நிறுவனம் பெரும்லாபத்துடன் செயல்படுத்த போவதாகவும், முதலீட்டிற்கு 200சதவிகிதம் லாபம் கிடைக்கும் எனவும்,அதன் நிறுவனர் பேட்டியில் சொன்னதை, எனக்கு தெரிவித்தார். நான் அதை உறுதிபடுத்திக் கொள்ள பங்குச்சந்தை குறித்து வரும் மாத இதழில், அந்த கம்பீரமான மனிதரின் பேட்டியை படித்து உறுதிபடுத்திக் கொண்டேன்!?.பங்குச்சந்தை ஏஜன்டும் நானும் தலா 200பங்குகள்வாங்கினோம். ஒரு பங்கு 52 அளவில்
ரூ.10,800 முதலீடு செய்தேன். அப்போது என்னிடம் உபரி சேமிப்பாக இருந்த முழுதொகையே அவ்வளவுதான்!
ரூ.10,800 முதலீடு செய்தேன். அப்போது என்னிடம் உபரி சேமிப்பாக இருந்த முழுதொகையே அவ்வளவுதான்!
பிறகு பங்குச்சந்தை மெகா சரிவு, ஹர்சத் மேத்தாவால் ஆரம்பிக்கப்பட்டது, ஊதிப்பெருத்த அந்த பெரிய ராட்சஸ பலூன் வெடித்துச் சிதறியது.
எங்களுடைய பங்கும் , லிஸ்டில் இருந்து காணாமல் போய்விட்ட கொடுமையும் நிகழ்ந்தது. இன்றைய மதிப்பில் சொன்னால், எனக்கு சுமார்ரூ.50,000 நட்டம்.
எங்கள் உறவினர் மருத்துவர், இந்தக்கதையை சொன்ன பிறகு அந்தக் கம்பெனி பங்கையும், அதன் டைரக்டர், கம்பெனி புரபைல் புத்தகத்தை, புரட்டினேன். இரண்டாம் பக்கத்தில்,கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்த, அந்த கனவினைப் பார்த்தேன். பத்திரிக்கை செய்தியில் பரபரத்த அதே ஆள்தான், டாக்டர் பிரகாஷ்தான்!. டாக்டர் பிரகாஷ், தனது கம்பெனியை பங்குச்சந்தையில், ஹர்சத் மேத்தாவைபோல ஊதிப் பெருக்கும் கலையைக் கற்று, பங்கு மதிப்பை ரூ. 52 ஆக(முக மதிப்பு ரூ.10) ஊதிப் பெரிதாக்கி, பலரிடம் கிடைத்த பணத்தில் ஒரு குறுநில மன்னரைப் போல் வாழ்ந்திருக்கிறார். எனது உறவினரான மருத்துவ பேராசிரியர் ,சொன்னது
உண்மைதானே! எப்படியோ எனது பங்கிற்கு!,நானும் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்!
உண்மைதானே! எப்படியோ எனது பங்கிற்கு!,நானும் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்!
டாக்டர் பிரகாஷ் நீண்ட சிறைவாசத்திற்கு பின்பு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகிய செய்தியையும், பிறகு அவருடைய பத்திரிகை பேட்டியை, ஒரு சில பத்திரி்கைகள் மட்டுமே வெளியிட்டிருந்தன.
சிறையில் ஏராளமாக மருத்துவ கட்டுரைகளையும், மருத்துவ புத்தகங்களும்,எழுதியுள்ளார். இனிமேல் சேவையுள்ளத்தோடு மருத்துவம் செய்யப் போவதாக உறுதி பூண்டுள்ளதாக சொல்லியுள்ளார். நம்புவோம்.!
நிற்க. ஹர்சத் மேத்தா பல வருடங்களுக்கு முன்பு சிறையில் இறந்துவிட்டார். பங்குச்சந்தை உயர்வின்போது இந்தியாவின்அதிக வரிசெலுத்திய மனிதராக இருந்தஅவர்.பங்குச்சந்தையில் விளையாடி,பல்லாயிரம் கோடி சேர்ததிருந்தார். சிறு முதலீட்டார்கள் பணத்தை சின்ன மீனை விழுங்கும் சுரா வாக விழுங்கி இருந்தார்,ஆனால்,சிறையில் தான் ,பல வருடங்களுக்குப் பின் அவருடைய இறுதி மூச்சை விட்டார்..அடியேன் இதற்கு பின்பு பல சமயங்கள் பங்குச்சந்தை பெருக்கமடைந்த போதுஆனந்தப்படவில்லை! அந்த ஆர்பாட்டங்களில் ஆசைப்படவுமில்லை. எனக்குத்தான், என் சிறிய முதலீடு ஒரு பாடம் நடத்தியிருக்கிறதே!
புதியவர்கள் புதிது புதிதாக நுழைந்து வெற்றி பெறவும், தோல்வி அடையவும் பங்கு சந்தை திறந்தே இருக்கிறது! ஆனால் அங்கு வளைவுகளும், விளைவுகளும் ஏராளம்! பெரும் புள்ளி (புலி)களுக்கு மட்டும் தான் அங்கு இடம்,பூனைக்குட்டிகளுக்கு அங்கு இடமில்லை.
பூதக்கண்ணாடியை பயன்படுத்தி ,அதன் விளம்பர எச்சரிக்கையை நீங்களும் வாசிக்கலாம்...,சிறிய எழுத்தில், சிகரட் பெட்டியில் உள்ள, மற்றும், மதுவிலுள்ளஎச்சரிக்கைவாசகங்களைப் போல....!
No comments:
Post a Comment