சார்ளி சாப்ளினின் என் கதை:
*********************************************
இரண்டு நாட்களுக்கு முன்பாக சார்ளி சாப்ளினின் என் கதை வாசித்து முடித்தேன் ! 220 க்கும் அதிகமான பக்கங்கள்.. 190 ரூபாய்.யூமா வாசுகியின் அழகிய தமிழில் !
வறுமை வாட்டியெடுத்த குழந்தைப்புருவம் ,துயரத்தின் இருள் துரத்திய வாழ்க்கை.கணவனால் கைவிடப்பட்ட தாய்., நடிகையான அவளின் நாடக மேடை வாழ்வின் இறுதிநாட்கள்..இளமையிலேயே பட்டினித்துயரத்தால் தாய் ஹென்னா உடல் நலிந்தவளாய் ,மனச் சோர்வுற்வளாய்,நாடக மேடைக்கான வளமான குரல் போய் ,சிட்னி,சார்ளி என இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் பட்ட பாடு ,நினைக்கவே நெக்குருகிறது .
ஹென்னா விற்கு மனச்சிதைவு அடிக்கடி ஏற்பட்டு மன நோய் விடுதியிலும்,சிறுவர்களிருவரும் அநாதை விடுதியிலும் தனித்தனியே பிரிந்து வாழும் வாழ்க்கை,என பந்தாடப்பட்ட வாழ்க்கை சாப்ளினுக்கு !
துயரத்திலும் நகைச்சுவை உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை சாப்ளினுக்கு,பின்னொரு காலத்தில் மேடை நடிகனாகி புகழ்பெற்று,பின் மௌனப் பட நகைச்சுவை சக்ரவர்த்தியாய் அமெரிக்காவில் வளம் வந்து...,கோடிக்கனக்கில் சம்பாரித்து...என உலகம் எவ்வளவு அள்ளித்தந்தாலும் ,சாப்ளினை எதுவும் மாற்ற முடியவில்லை..!
தன சுதந்திர தாகத்தால் -கிரேட் டிக் டே ட்டர் , மாடர்ன் லைம்ஸ்,சிட்டி லைட் படங்கள் என வெற்றிப் படங்கள் தந்த போது அமெரிக்க முதலாளிளால் ,கம்யூனிஸ்ட் என நியாமற்ற முறையில் , முத்திரை குத்தப் பட்டு துரத்தப்பட்ட துயரம்..,என சாப்ளின் தான் அமெரிக்காவை விட்டு வெளியேறிய வரை தன வாழ்நாளின் அனைத்து சம்பவங்களையும் நினைவு கூருகிறார்,. சாப்ளின்எதற்காகவும் சமரசம் செய்தாரில்லை,,!தன வாழ்வின் மீதான கூரான விமர்சனங்களையும் ,காதல்,போராட்டம்,தனது மன வாழ்க்கை தோல்விகள்,30 வயதுஇளைய ஊணா( Oona O'Neill)வுடனா இனிய திருமண வாழ்வு..,வெற்றியின் உச்சம் ,என தன வாழ்வின்அனைத்து போக்குகளையும் அலசுகிறார்.....
அற்புத மனிதர் சாப்ளினின் வாழ்க்கை-என் கதை ,அருமையான இலக்கியத்தரமான சுயசரிதை ,அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்..!
--சேகு --
No comments:
Post a Comment