Monday, June 09, 2014

சார்ளி சாப்ளினின் என் கதை:


சார்ளி சாப்ளினின் என் கதை:
*********************************************

இரண்டு நாட்களுக்கு முன்பாக சார்ளி சாப்ளினின் என் கதை வாசித்து முடித்தேன் !  220 க்கும் அதிகமான பக்கங்கள்..  190 ரூபாய்.யூமா வாசுகியின் அழகிய தமிழில் !
வறுமை வாட்டியெடுத்த குழந்தைப்புருவம் ,துயரத்தின் இருள்  துரத்திய  வாழ்க்கை.கணவனால் கைவிடப்பட்ட தாய்., நடிகையான அவளின் நாடக மேடை வாழ்வின் இறுதிநாட்கள்..இளமையிலேயே பட்டினித்துயரத்தால் தாய் ஹென்னா உடல் நலிந்தவளாய் ,மனச் சோர்வுற்வளாய்,நாடக மேடைக்கான  வளமான குரல் போய்  ,சிட்னி,சார்ளி என இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் பட்ட பாடு ,நினைக்கவே நெக்குருகிறது .
ஹென்னா விற்கு மனச்சிதைவு அடிக்கடி ஏற்பட்டு மன நோய் விடுதியிலும்,சிறுவர்களிருவரும் அநாதை விடுதியிலும் தனித்தனியே பிரிந்து  வாழும் வாழ்க்கை,என பந்தாடப்பட்ட வாழ்க்கை சாப்ளினுக்கு !
துயரத்திலும் நகைச்சுவை உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை சாப்ளினுக்கு,பின்னொரு காலத்தில் மேடை நடிகனாகி புகழ்பெற்று,பின் மௌனப் பட  நகைச்சுவை   சக்ரவர்த்தியாய் அமெரிக்காவில் வளம் வந்து...,கோடிக்கனக்கில் சம்பாரித்து...என உலகம் எவ்வளவு அள்ளித்தந்தாலும் ,சாப்ளினை எதுவும் மாற்ற முடியவில்லை..!
தன சுதந்திர தாகத்தால் -கிரேட் டிக் டே ட்டர் , மாடர்ன் லைம்ஸ்,சிட்டி லைட் படங்கள் என வெற்றிப் படங்கள் தந்த போது அமெரிக்க முதலாளிளால் ,கம்யூனிஸ்ட் என நியாமற்ற முறையில் , முத்திரை குத்தப் பட்டு   துரத்தப்பட்ட துயரம்..,என சாப்ளின் தான் அமெரிக்காவை விட்டு வெளியேறிய வரை தன வாழ்நாளின் அனைத்து சம்பவங்களையும் நினைவு கூருகிறார்,. சாப்ளின்எதற்காகவும்  சமரசம் செய்தாரில்லை,,!தன வாழ்வின் மீதான கூரான விமர்சனங்களையும் ,காதல்,போராட்டம்,தனது மன வாழ்க்கை தோல்விகள்,30 வயதுஇளைய  ஊணா(  Oona O'Neill)வுடனா இனிய திருமண வாழ்வு..,வெற்றியின் உச்சம்  ,என தன வாழ்வின்அனைத்து  போக்குகளையும் அலசுகிறார்.....

அற்புத மனிதர் சாப்ளினின் வாழ்க்கை-என் கதை ,அருமையான இலக்கியத்தரமான சுயசரிதை  ,அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்..!

--சேகு​​ --

Friday, May 30, 2014

நூல்களுடன் எனது நாட்கள்..!

நூல்களுடன் எனது நாட்கள்..! 
***************************
என்னுடைய படுக்கையிலும், பக்கத்திளுமிருக்கின்றன ...
அரை வாசிப்பிளிருக்கும் புத்தகங்கள்..!
படிக்க தூண்டும் அத்தனை புத்தகங்களையும், 
வாங்கிவிடும் மனதும்,வசதியும் வந்துவிட்ட பிறகு 
தொட்டுத்தடவினாலே அசதிவந்துவிடுகிறது...
எதார்த்த வாழ்க்கையின், பதார்த்தமாகிப் போனதால்.. 
வயோதிக மன்னனின் அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்ட 
புதிய இளம் பெண் போல விழித்துக் கொண்டிருக்கின்றன
என் புத்தகங்கள் ...வாசிப்பவனுக்காக..!

--சேகு--

Sunday, May 25, 2014

கோச்சடியான் -குறைப்பிரசவம் :பிழைத்துக்கொண்டால் நலம்!



கோச்சடியான் -குறைப்பிரசவம்
---------------------------------------------------
கதை பரவாயில்லை ...
ரஜனி vs தொழில் நுட்ப அனிமேசன் ரஜினி -பாஸ் மார்க் ! அழகாக இருக்கிறார் ,ஆனால் அனிரூத் ரேஞ்சிற்கு பல இடங்களில் ஒல்லி!
கிராபிக் நாசர் பரவாயில்லை !
கிராபிக் நாகேஷ் பரவாயில்லை !
கிராபிக் தீபிகா படுகோன் - படு கோணலாக ,குட்டையாக ,உயிரோட்டம் குறைவாக ...
மோசன் கிராபிக் சில இடங்களில் நன்றாகவும்,பல இடங்களில் படு சாதாரணமாகவும் இருக்கிறது !
மற்ற கதா பாத்திரங்கள் ,படு சுமாராய்..., படுத்தி எடுக்கின்றன அதிலும் சரத்,ஆதி,சோபனா,பொம்மலாட்டம் நாயகி, எல்லோரும் பார்க்க பரிதாபம்..!
சண்டைக் காட்சிகளும்,பாடல் காட்ச்சி அமைப்புகளும் நன்றாக வந்திருப்பது ஆறுதல் ! வேகமான கதை(ரவிகுமார்),இசைப்புயலின் இசை,ரஜனி,நாசர் பாத்திரங்களின் அமைப்பு,குரல் ஆகியவை , படத்தை தாங்கிப்பிடிக்கிறது.
அனைத்தையும் மீறி ,மோசன் கிராபிக் துவக்கப்புள்ளியாக சொவ்ந்தர்யாவைப் பாராட்டலாம் . !
இன்னமும் மெனக்கெட்டிருந்தால் நன்றாக வந்திருக்க வேண்டிய படம்!
வண்ணத்தூரிகையில் வந்திருக்கும் சின்ன கிறுக்கல்!
இன்குபேட்டரில் உள்ள இந்த குறைப்பிரசவ குழந்தை பிழைத்துக்கொண்டால் நலம்!

Wednesday, May 21, 2014

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !?

காப்பாற்றும் கண்ணபிரானா? -மோடி !? ---------------------------------------------------------------------- பிரதமராக கோடான கோடி வாக்குகள்,கோடான கோடி செலவினங்கள்,ஸ்பான்சர்கள் மூலமாக மோடி வென்றுவிட்டார்.மக்கள் பலத்தால் வென்றவரை வாழ்த்துவது மரபு.,என்வே சில, பல தயக்கங்களைமீறி வாழ்த்துவோம் ! புதிய அரசை குறைந்தது 100 நாட்கள் கழித்து விமர்சிப்பதே ஞாயமாக இருக்கும்.!ஆனால் வெற்றிக்காக இவர்கடந்துவந்த பாதை,கொள்கைகளை ஒரு பறவைப்பார்வை பார்க்கலாம். பாராளுமன்ற பி.ஜே.பி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி 125 கோடி மக்களுக்காக பாடுபடுவேன் என்று சொல்லியபோது மகிழ்ச்சியாக இருந்தது,.ஆனால் பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பல வித மாக விதமுரண்பாடி, பெரும்பான்மை மக்களுக்கு ,சிறுபான்மை இஸ்லாமிய,கிருத்துவ மக்கள் அச்சுறுத்தலாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துவதில் கொள்கையாகவும்,குறியாகவும் இருந்தன.ஆனால் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வயிருவீங்கிய ,உடல் சிறுத்த சத்தற்ற உயிரனத்திற்கு ஒப்பாகவே இருக்கிறார்கள் . .உயர் கல்வியில் ,வேலை வாய்ப்பில் அரசின் அத்துணை துறைகளிலும் 5 சதவீதத்துக்கு கீழே இருக்கக்கூடிய இந்த சவலைப் பிள்ளையை ,பூச்சான்டியாய் சித்தரிப்பதில், சித்தாந்தப் பெருமை கொள்ளும் சங்க பரிவார் பெற்றெடுத்த முத்து தான் மோடி.தனது மண்ணைக் கூட முத்தமிடும் இவரிடம் சிறுபான்மை மக்களைப் பற்றிய ஆறுதலான ஒரு வார்த்தை , தவறிககூட வெளிவரவில்லையே !. நிச்சயமாக இந்திய மக்கள் மதவாதப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களில்லை ! ஏனெனில் இதுவரை இந்திய வரலாற்றில் ,மதவாதக் கட்ச்சிகள் பெரும்பான்மை பலம் பெற்றதே இல்லை.!பின் இந்த முறை என்ன நடந்துள்ளது?செல்லரித்துப் போன காங்கிரசின் வேதனை தரும் ஆட்சியிலிருந்து காப்பாற்றும் முகமாக இந்த காவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்! .,இவருடைய முந்தைய வரலாறுகளைகே கூட புறம்தள்ளி ..! இதில் ஸ்பான்சர்களின்(பெரு முதலாளிகள்,அவர்களின் மீடியா பங்காளிகள் ) பங்கு முக்கியமானது..பெருமுதலாளிகளுக்கு வேரு கவலை!? குறைந்த விலையில்,குறைந்த வரியில் தங்களுடைய அகோர பசிக்கு காங்கிரஸ் தந்து கிழ டாகிப்போனதால்,சவாரிக்கு புது குதிரை வேண்டுமே! இந்நிலையில் பிரதமர் மோடி வறுமை இந்தியர்கள்,தலித்துகள்,சிறுபான்மை மக்கள் ,என கையறு நிலையில் இருக்கும் திரௌபதி களை காப்பாற்றும் கண்ணபிரானா? துகிலுரியப்பட்ட போது நெடுமரமாக நின்ற பீஷ்மாச்சாரியாரா? வரும் ஐந்தாண்டுகள் முடிவுசெய்யும்!

Sunday, February 23, 2014

சரியான தண்டனை எது?. சாகடிக்கப் பட வேண்டியது எது ? சிந்திக்கப்பட வேண்டிய கேள்வியாக ....!?

உயிப்பலி ,,படுகொலை செய்வது தனி நபர்களாக இருந்தாலும் , பயங்கரவாதமாக இருந்தாலும் தண்டனை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.எத்தகைய குற்றமாக இருந்தாலும் ,விரைந்த நீதி,தகுந்த தண்டனை என்பது அவசியத்தேவை.தண்டனை என்பது காலத்திற்கு காலம் மாறிவந்திருக்கின்றது .இனக்குழுக்களிடையே போர் ,படு கொலைகள் ,பழிக்குப் பழி வாங்கல் என்பது நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் மரணம் தான் பரிசு என்பதனால் அந்த விளை ( கொலை)யாட்டை செய்வதற்கு மனிதர்கள் பயந்து நடுங்கியாதாக வரலாறு சொல்லவில்லையே !.விட்டில் பூச்சியாக மனிதர்கள் வீழ்ந்துதானே வந்திருக்கிறார்கள் !கலிங்கப் போருக்கு பிந்தைய அசோகர் மனமாற்றம் வரலாற்றில் பதிவாகியுள்ளதே !முதலாம் ,இரண்டாம் உலகப் போரில் மாண்ட மனிதர்கள் 7 கோடிக்கு மேல்.மரணத்திற்கு தண்டனை யாரையும் பயமுறுத்தியதாக தெரியவில்லையே! ஒவ்வொரு படுகொலைக் க லத்திலும் பற்பல மூலைச் சலவை உயிர்த் தியாகங்கள் இருந்திருக்கின்றனவே. ராஜ புத்திர வீரர்களின் போர் வீரம் நமக்குத்தெரியும்,அவர்களுக்கு போரின் முன்னதாக கொடுக்கப்படும் அபின் அவர்களின் மரணபயத்தை ம்றத்துப் போக செய்திருந்திருக்கிறது.அபின் களின் வடிவங்களில் வேறு சில மாற்றங்களாக அவற்றின் இடத்தில் சில தத்துவங்கள்,மதக் கொள்கைகள் அவ்வளவுதான்.இவர்களின் பாதகச் செயல்களுக்கு பின்னாலும் சமூகத்தில் ,ஒரு சுதந்திர வாழ்வு வாழ்ந்து குற்ற உணர்வுடனோ,பலர் குற்றுணர்வு இன்றி பெருமிதமாக பல பதக்கங்களுடனோ வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் ..!? சரி தனி ந நபர் வன்செயல்களைப் பார்ப்போம் : குற்றவாளிகளில் பலர் சில மணி நேரத்தில்,சில நாட்களில் தங்களுடைய தவறை உணரும் மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள் .அவர்களை தண்டிக்கலாம் ,ஆனால் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?கொடூரமானதாக இருக்க வேண்டுமா? அதனால் என்ன லாபம்? அவர்களைச் சார்ந்தவர்களின் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னவாகும்? மடமைக்கு மடமைதான் மருந்தா?....கொடூரமான தண்டனைகள் புதிதாக குற்றம் செய்வோரை பயமுருத்துமா?எதைப் பற்றியும் பயமற்ற மிருக நிலையில் தவறு செய்பவர்கள் மரண பயமற்ற மன நிலையிலேயே செய்கிறார்கள்..தூக்குத்தண்டனையை பயமற்றே பலரும் eற்றுக்கொள் கிறார்கள் (பகத்சிங்,சதாம் உசேன் போன்ற அரசியல் தலைவர்களாகட்டும்,அல்லது 100 கொலை செய்த சில கு ற்ற வாliகலாகட்டும்) .பார்க்கும் அப்பாவிகளை பயமுறுத்தி என்ன பயன்.? இன்னும் சில கேள்விகள்:தற்காப்புக்காக கொலை செய்யும் சில அறிய நிகழ்வுகளுக்கு பயங்க்ர தண்டனை தருவது சரியாகுமா? பெண்களை கவுரவ கொலை செய்வது அவர்களின் இரத்த சொந்தங்களே! இந்த அம்புகளை எய்வது யார்? அம்புகளை மு்றி ப் பதால் நீதி கிடைத்துவிடுமா?( ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் -அவர்களின் பெற்றோர்கள்!?) காதல் மனம் புரிந்தவர்களை கொல்லும் கப் பஞ்சாயத்துகளுக்கு மரணதண்டனை கொடுக்கலாம் தான்! ஆனால் அவர்களும் அம்புகல்தானெ! சில ஆயிரம் ஆண்டுகள் நடை பெற்று வந்த உடன்கட்டை சம்பிரதாயம் கொலைகுற்ற வாளி க் கூண்டில் நிறுத்தி சாகடிக்கப் பட வேண்டும் என்பதேசரி!. ...சாகடிக்கப் பட வேண்டியது எது ? சிந்திக்கப்பட வேண்டிய கேள்வியாக ....!? சில தகவல்கள்:நம் நாட்டில் நடை பெரும் தற்செயல், திட்ட மிட்ட படுகொலைகளை விஞ்சி நிற்கும் கீழ்க்கண்ட படுகொலைகளுக்கு என்ன தீர்வு?:***“:::: (தி ஹிந்து தமிழ் 20.02.14-செய்தி: "உலகில் சாலை விபத்துக்களில் மரணமடைவோர், காயமடைவோர், ஊனமுறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டி ருக்கிறது. வெளிநாடுகளில் சாலை விபத்துக்களில் பாதிக்கப் படுவோரை காப்பாற்றும் பொறுப்பும் செலவுகளும் அரசைச் சார்ந்தது என்பதால், அவை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துக்களைக் குறைத்துள்ளன. இந்தியாவில் விபத்துக்களில் பாதிப்புக் குள்ளாவோர் பெரும்பாலும் தனியார் மருத்துவர்களிடமே செல்கின்றனர். இந்த விஷயத்தில் அரசு அக்கறை கொள்வதாகத் தெரிவ தில்லை. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால் சாலைகளைச் சரிசெய்ய வேண்டும். அதில் குன்றுகள் இருத்தலாகாது. போக்குவரத்து ஒழுங்கு காப்பாற்றப் படவேண்டும். இங்கே சாலை போடுவது நெடுஞ்சாலைத்துறை என்றால் அதில் மின்சாரக் கம்பங்கள் போடுவது மின்வாரியத்துறை. சாலையைப் பராமரிப்பது இன்னொரு துறை. எனவே ஒருங்கிணைப்பும் அக்கறையும் இருப்பதில்லை. அதனால்தான் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் இறக்கின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் முதல் உலக யுத்தத்தில் கூட இறக்கவில்லை. சுனாமியில் கூட 9 ஆயிரம் பேர்தான் இறந்தனர். ஆனால் சாலை விபத்தில் 10 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் இறக்கிறார்கள். 40 ஆயிரம் பேர் கை, கால்களை இழந்து முடமாகிறார்கள். “திருமணமாகி ஒரு வாரமேயான மணப்பெண் கணவனை இழப்பது, ஒரே பையனை வைத்துள்ள பெற்றோர் தன் வாரிசை இழப்பது, குழந்தை மட்டும் இருந்து பெற்றோர்களை இழந்து குழந்தை தவிப்பது எல்லாமே தினம் தினம் கண்டு மனம் நொந்துபோன மருத்துவர் நான். பார்த்துப் பார்த்து மனம் புழுங்குவதை விட இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றே 18 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் சென்றேன் . நீதியரசர்கள் முன் இந்த விஷயத்தை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த விபத்துக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் செய்துள்ளது. அடுத்தது உறுதிப்பாடான ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று டாக்டர் ராஜசேகரன் எமது நிருபர் கா. சு. வேலாயுதத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.) ------------------------- ********* எழுத்து தவறுகளை மன்னிக்கவும் ****