Friday, July 22, 2005

உண்மையின் பால்

உண்மையின் பால்
---------------------
உண்மைக்கும் உண்டு
ஆண்பால்,பெண்பால்.
மறைப்பதற்கு ஏதுமில்லை
எனகாதலித்ததையும்,காதலிக்கப்பட்டதையும்
நீ சொல்லும்போதான கர்வத்தை
என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

என்கவசங்களையும் மீறி
என்னையும் ஊடுருவப் பார்க்கிறாய் .
துணைவனே.., பகிர்ந்து கொள்ள
எவ்வளவோ இருக்கையில்
ஏன் ஆர்வத்துடன் கேட்க்கிறாய்?
நம் சந்திப்புக்கு முன்பான என்னைப்பற்றி?.

1 comment:

சேகு said...
This comment has been removed by a blog administrator.