எழுத்தாளர் இமையத்தின் புதிய நாவல் -செல்லாதபணம் வாசிக்கத் துவங்கீய போது இந்த நாவல்அவருடைய பழைய நாவல்கள் எங்கதை, கோவேறுகழுதைகள் போன்று வாசிப்பில் இழுத்துக் கொண்டுசெல்லுமா, அவருடைய கதைச் சூழலில் அவரின்எழுத்து நடையில் மூழ்கி எழுந்த அனுபவங்களைஅசைபோட்டபடி வாசிக்கத் துவங்கினால், இமையம்தனது புதிய படைப்பிலும் படைப்பிலக்கியத்தின்உச்சங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்வதில்தான் வல்லவர் என்பதை உத்தரவாகமாகவேதருகிறார் செல்லாப் பணத்துலும்.
தீக்காயங்களுடன் தற்கொலை முயற்சியிலா? அல்லது அவள் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆட்டோ ரவியின் அடாத கொடுமையின்உச்சத்தில் ரேவதியை கொழுத்தி விட்டு விட்டானா? என்று பதைப்பதைப்பில் துவங்கும் நாவல் முடியும்222-வது பக்கம் வரை நம்மை இந்தக்கதை மனதைபதைக்க வைக்கிறது.
ரேவதி தீக்காயங்களுடன், அருகிலுள்ள பலமருத்துவமனைகள் கைவிரித்து விட்ட நிலையில்பாண்டிச்சேரி ஜிப்மரில், கணவன் ரவியால்சேர்க்கப்படுவது தான் நாவலின் துவக்கம். கூடவேதனது மகளுக்கு என்ன ஆயிற்றோ என்றபதைபதைப்பில் அப்பா ஹெட்மாஸ்டர் நடேசன் அம்மாஅமராவதி பதைபதைப்புடன் வாடகை காரில்ஜிப்மருக்கு வருகிறார்கள். சென்னையில் இருந்துஅண்ணன் முருகன் ரேவதியின் தோழியும்அண்ணியுமான அருண்மொழியும் வந்துசேருகிறார்கள்.
பொறியியல் பட்டதாரியான ரேவதி பட்ட படிப்புமுடித்து நல்ல வேலையும் கிடைக்கக் கூடிய சூழலில்பர்மா பஜார், பர்மா அகதிகளான ஏழ்மையானகுடும்பத்தை சேர்ந்தவன், திருமணம் ஆகாத அக்கா, கவலைபடும் அம்மா,( ) வயதான அப்பாஎன்று குடும்பமே ஆட்டோ ஓட்டும் ரவியை நம்பிஇருந்தது.
அதிகம் படிக்காத ரவி சற்று சிவப்பான கலையானதோற்றமுடையவன். ரேவதியின் மீது முதல்சந்திப்பிலேயே காதலில் வீழ்ந்து நாளொன்றுக்குஉடம்பில் பச்சை குத்திக் கொண்டு எப்படியோரேவதியை கவர்ந்து விட்டார். தோழிஅருண்மொழியுடைய, குடிகாரன் அதிகம்படிக்காதவன், அடாவடிக்காரன். இவனை போய்காதலிக்கிறாயே என்ற எச்சரிக்கையையும் அப்பா, அம்மாவுடைய கவலை வெறுப்பு, வேதனை இவற்றைஎல்லாம் தாக்குப் பிடித்து ரவியைத் தான் திருமணம்செய்து கொள்வேன் என்ற பிடிவாதத்தில்வெற்றிப்பெற்றுவிட்ட ரேவதி அதன் பிறகுஅனுபவித்த வாழ்க்கை நரகமாகவே போய் விட்டது. இந்த ஆறு வருடங்களில் இரண்டு குழந்தைகள்ஆகிவிட்ட போதும் அவளுக்கு தினமும் குடித்துவிட்டுவரும் ரவியிடம் அடியும் உதையும் தான்வாழ்க்கையாக இருந்தது.
படித்த படிப்புக்கான நல்ல வேலையையும் தன்னைவிட பெரிய ஆள் ஆகிவிடக் கூடாது என்ற ரவியின்அடாவடிப் போக்கினால் வீட்டுப் பெண்ணாகவே மாறிஇருந்தால் ரேவதி. நல்ல வருமானம் கிடைத்தநாட்களில் ரவி நல்லவனாக இருப்பான் . வருமானம்இல்லாத நாட்களில், மனித தன்மையை இழந்து போய்இருப்பான். அமராவதி ஐந்தாவது மாடி தளத்தில்எண்பத்தியொன்பது சதவீதம் தீக்காயம் அடைந்தரேவதி ஐந்து நாள் ஜீவ மரண போராட்டத்தில்இருக்கும் போதெல்லாம், இடையிடையே நினைவுவந்து கொஞ்சம் கொஞ்சம் பேசும் போதெல்லாம், எப்பொழுதாவது வாக்குமூலம் சொல்லி தன் மகளைகொழுத்தி விட்ட மருமகன் ரவியை எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று கருவிக் கொண்டுஇருந்தார். மருத்துவமனையின் முகப்பிலும்தாழ்வாரத்திலுமாக ஐந்து நாட்களாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள், ஹெட்மாஸ்டர் நடேசனும், தாயார் அமராவதியும் குழந்தையில் இருந்து ஒரேமகள் என்று செல்லமாக வளர்த்த ரேவதிஅன்றாட்ங்காய்ச்சிகாரனான ரவியை தான்திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாகஇருந்தாள். இல்லை என்றால் என்னை உயிரோடுபார்க்க முடியாது என்று சொல்லி அப்பா அம்மாவின்அனுமதியுடன் ரவியை திருமணம் செய்துகொண்டாள். மனம் கசந்து போன நடேசன் இந்த ஆறுவருட காலத்தில் மகளிடம் பேசுவதை நிறுத்தி விட்டுஇருந்தார்.
அமராவதி கொஞ்ச காலத்திலேயே மகள் ரேவதிவரும்போதெல்லாம் ரேவதியுடைய பரிதாபநிலையைக் கண்டு அழுது புலம்புவாள். ஆட்டோடியூவில் இருந்து மாதம் தவறாமல் நடேசனிடம் கேட்டுவாங்கியும், தெரியாமலும் ரேவதிக்கு பணம்கொடுத்துக் கொண்டே இருந்ததை நினைத்து தனதுமகள் எப்படியாவது பிளைத்துக் கொண்டு வரவேண்டும் என்று தாயுள்ளம் அழுதது. ரேவதிவரும்போதெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே வீட்டிற்குவெளியே வந்து நின்று ரவி கூட்டிக் கொண்டு போய்விடுவான்.
அமராவதி உள்ளம் கொந்தளித்துக் கொண்டேஇருந்தது. இந்த சனியன் புடித்தவன் தான் ரேவதியைகொளுத்தி இருப்பான். அவனை இப்பொழுதாவதுஜெயிலுக்கு மகள் அனுப்பி வைப்பாள் என்று ஐந்தாம்நாள் மரணத்தை தொட்டுக் கொண்டு இருக்கும்ரேவதியிடம், மரண வாக்குமூலம் வாங்க வந்தநீதிபதியுடைய, வாய்மொழிக்காக காத்திருந்தார்கள், ரேவதி குடும்பத்தினர்.
ஆனால் ரேவதி சமைக்கும்போது ஏற்பட்டவிபத்தினாலேயே தனக்கு தீக்காயம்ஏற்பட்டிருக்கிறது என்று வாக்குமூலம்கொடுத்திருந்தாள் ரேவதி. மருத்துவமனையில்சுற்றிக் கொண்டிருந்த ரேவதி புருசன் ரவியை,அருண்மொழி மறித்து, இப்படி அநியாயமாககொளுத்தி விட்டாயே கொலைகார பாவி என்றுதிட்டிய அருண்மொழியை பார்த்து ரவி, அக்கா நான்சத்தியமாக தீ வைத்து கொல்லவில்லை. ஆட்டோ டியூகட்ட பணம் வாங்கி வந்திருந்தாள். அதில் ஐநூறுரூபாய் எடுத்து செலவு செய்து விட்டேன். அதற்குஎன்மீது சண்டை போட்டாள். நீ குடித்தே நம்குடும்பத்தை அழித்து விட்டாய் என்று ஆவேசமாககத்தினாள். செத்து ஒழிகிறேன் என்றுசொன்னவளிடம் போ போய் செத்து தொலை என்றுகோவத்தில் சொல்லி விட்டேன். அவள்சமையலறைக்கு சென்று தீ வைத்துக் கொண்டாள். அவள் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திகொண்டு இருந்தால் கூட பிழைத்திருப்பாள். ஆனால்அவள் ஆட்டோவிற்கு வைத்து இருந்த டீசலை ஊற்றிதீ வைத்துக் கொண்டாள். என்னால் அவளைகாப்பாற்ற முடிய வில்லை அக்கா என்று அழுதான்.ஆனால் அந்த அழுகையின் ஊடே இன்னிக்குரேவதியை காப்பற்ற பத்து லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு என் பிள்ளையை எப்படியாவதுகாப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டு இருக்கிறார்மாமா. ஆனால் இந்த ஆறு வருடத்தில் என்னிடம்என்றாவது பேசி இருக்கிறாரா, அவருடைய கவுரவம்என்னிடம் பேசுவதை தடுத்தது. எதுமில்லாதவன்பிச்சைக்காரன் என்று அவருடைய ஒட்டுமொத்தகுடும்பமும் ஏசிக் கொண்டு இருந்தது. அவருக்குஇருக்கும் வசதிக்கு என்னை கொஞ்சம் கைதூக்கிவிட்டிருந்தால் இந்நேரம் நானும் மனுசனாகி பத்துஆட்டோ ஓட்டி ஓனராகி இருப்பேன். பணக் கஸ்டமும்வந்திருக்காது. எங்களுக்குள் சண்டையும்வந்திருக்காது. இன்றைக்கு எத்தனை பணம்கொடுத்தாலும் அவள் உயிரை காப்பாற்ற முடியுமா.எல்லாம் செல்லாத பணமாக போயிருச்சு.
அம்மா அமராவதியினுடைய மனக் குமறல்கள்நடேசனுடைய, அருண்மொழியுடைய என்றுஒவ்வொரு கதாப் பாத்திரங்களும் தங்களுக்கே உரியவாழ்வின் எதார்த்தத்தை நியாயங்களைகுமுறல்களாக வெளிப்படுத்தி இருப்பதுஇமயத்தினுடைய எழுத்தின் சிறப்பு. ரேவதிதனக்கேயான நியாயத்துடன் தனது இரண்டுகுழந்தைகளின், வாழ்வினையும் கருதிகொடுமைக்கார கணவன் ரவிக்கு தண்டனை ஏதும்வாங்கித தராத, மரணத்தின் தருவாயிலும், பழி, பாவங்கள் அல்லாத மனுசியாக இருந்தாள். காதல்வாழ்வில் இருக்கிறது வறுமை, வாழ்வை புரட்டிப்போடுகிறது. சமூகம் ஒன்றுமில்லாதவர்களைவிட்டேத்தி மன நிலைக்கு மாற்றி விடுகிறது.
அடியும் உதையுமான குடும்ப வாழ்க்கை, குடிப்பழ்க்கம், அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையாய்போய் விட்டது. சற்று வசதியான நடுத்தர வர்க்கமோ, வறட்டு கவுரவங்களின் சிறைபட்டுக் கிடக்கிறது. ரேவதியின் மரணம் நம்மை உலுக்கி விடுகிறது.
ஐந்தடுக்கு ஜிப்மர் மருத்துவமனையில்அடுத்தடுத்து உள்ளே வரும் தீக்காய நோயாளிகளும்,சரமாரியாக தினசரி வெளியேறும், மரணங்களும் நம்சமூகத்தின் இந்த இருண்ட பக்கங்களையும் அங்குவரும் மனிதர்களின் உணர்வுக்குமுறல்களையும் ஒருவடுபோல் வாசித்த பின்பும் நெருஞ்சிமுள்ளாய்உறுத்திக் கொண்டிருக்கும் எதார்த்தத்தை செல்லாதபணம் எனும் இலக்கியப் படைப்பாய் நம் முன்நிருத்தியிருக்கிறார் இமையம்.