Sunday, February 23, 2014
சரியான தண்டனை எது?. சாகடிக்கப் பட வேண்டியது எது ? சிந்திக்கப்பட வேண்டிய கேள்வியாக ....!?
உயிப்பலி ,,படுகொலை செய்வது தனி நபர்களாக இருந்தாலும் , பயங்கரவாதமாக இருந்தாலும் தண்டனை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.எத்தகைய குற்றமாக இருந்தாலும் ,விரைந்த நீதி,தகுந்த தண்டனை என்பது அவசியத்தேவை.தண்டனை என்பது காலத்திற்கு காலம்
மாறிவந்திருக்கின்றது .இனக்குழுக்களிடையே போர் ,படு கொலைகள் ,பழிக்குப் பழி வாங்கல் என்பது நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் மரணம் தான் பரிசு என்பதனால் அந்த விளை ( கொலை)யாட்டை செய்வதற்கு மனிதர்கள் பயந்து நடுங்கியாதாக வரலாறு சொல்லவில்லையே !.விட்டில் பூச்சியாக மனிதர்கள் வீழ்ந்துதானே வந்திருக்கிறார்கள் !கலிங்கப் போருக்கு பிந்தைய அசோகர் மனமாற்றம் வரலாற்றில் பதிவாகியுள்ளதே !முதலாம் ,இரண்டாம் உலகப் போரில் மாண்ட மனிதர்கள் 7 கோடிக்கு மேல்.மரணத்திற்கு தண்டனை யாரையும் பயமுறுத்தியதாக தெரியவில்லையே! ஒவ்வொரு படுகொலைக் க
லத்திலும் பற்பல மூலைச் சலவை உயிர்த் தியாகங்கள் இருந்திருக்கின்றனவே. ராஜ புத்திர வீரர்களின் போர் வீரம் நமக்குத்தெரியும்,அவர்களுக்கு போரின் முன்னதாக கொடுக்கப்படும் அபின் அவர்களின் மரணபயத்தை ம்றத்துப் போக செய்திருந்திருக்கிறது.அபின் களின் வடிவங்களில் வேறு சில மாற்றங்களாக அவற்றின் இடத்தில் சில தத்துவங்கள்,மதக் கொள்கைகள் அவ்வளவுதான்.இவர்களின் பாதகச் செயல்களுக்கு பின்னாலும் சமூகத்தில் ,ஒரு சுதந்திர வாழ்வு வாழ்ந்து குற்ற உணர்வுடனோ,பலர் குற்றுணர்வு இன்றி பெருமிதமாக பல பதக்கங்களுடனோ வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் ..!?
சரி தனி ந நபர் வன்செயல்களைப் பார்ப்போம் : குற்றவாளிகளில் பலர் சில மணி நேரத்தில்,சில நாட்களில் தங்களுடைய தவறை உணரும் மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள் .அவர்களை தண்டிக்கலாம் ,ஆனால் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?கொடூரமானதாக இருக்க வேண்டுமா? அதனால் என்ன லாபம்? அவர்களைச் சார்ந்தவர்களின் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னவாகும்? மடமைக்கு மடமைதான் மருந்தா?....கொடூரமான தண்டனைகள் புதிதாக குற்றம் செய்வோரை பயமுருத்துமா?எதைப் பற்றியும் பயமற்ற மிருக நிலையில் தவறு செய்பவர்கள் மரண பயமற்ற மன நிலையிலேயே செய்கிறார்கள்..தூக்குத்தண்டனையை பயமற்றே பலரும் eற்றுக்கொள் கிறார்கள் (பகத்சிங்,சதாம் உசேன் போன்ற அரசியல் தலைவர்களாகட்டும்,அல்லது 100 கொலை செய்த சில கு ற்ற வாliகலாகட்டும்) .பார்க்கும் அப்பாவிகளை பயமுறுத்தி என்ன பயன்.? இன்னும் சில கேள்விகள்:தற்காப்புக்காக கொலை செய்யும் சில அறிய நிகழ்வுகளுக்கு பயங்க்ர தண்டனை தருவது சரியாகுமா? பெண்களை கவுரவ கொலை செய்வது அவர்களின் இரத்த சொந்தங்களே! இந்த அம்புகளை எய்வது யார்? அம்புகளை மு்றி ப் பதால் நீதி
கிடைத்துவிடுமா?( ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் -அவர்களின் பெற்றோர்கள்!?) காதல் மனம் புரிந்தவர்களை கொல்லும் கப் பஞ்சாயத்துகளுக்கு மரணதண்டனை கொடுக்கலாம் தான்! ஆனால் அவர்களும் அம்புகல்தானெ! சில ஆயிரம் ஆண்டுகள் நடை பெற்று வந்த உடன்கட்டை சம்பிரதாயம் கொலைகுற்ற வாளி க் கூண்டில் நிறுத்தி சாகடிக்கப் பட வேண்டும் என்பதேசரி!. ...சாகடிக்கப் பட வேண்டியது எது ? சிந்திக்கப்பட வேண்டிய கேள்வியாக ....!?
சில தகவல்கள்:நம் நாட்டில் நடை பெரும் தற்செயல், திட்ட மிட்ட படுகொலைகளை விஞ்சி நிற்கும் கீழ்க்கண்ட படுகொலைகளுக்கு என்ன தீர்வு?:***“::::
(தி ஹிந்து தமிழ் 20.02.14-செய்தி: "உலகில் சாலை விபத்துக்களில் மரணமடைவோர், காயமடைவோர், ஊனமுறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டி ருக்கிறது. வெளிநாடுகளில் சாலை விபத்துக்களில் பாதிக்கப் படுவோரை காப்பாற்றும் பொறுப்பும் செலவுகளும் அரசைச் சார்ந்தது என்பதால், அவை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துக்களைக் குறைத்துள்ளன. இந்தியாவில் விபத்துக்களில் பாதிப்புக் குள்ளாவோர் பெரும்பாலும் தனியார் மருத்துவர்களிடமே செல்கின்றனர். இந்த விஷயத்தில் அரசு அக்கறை கொள்வதாகத் தெரிவ தில்லை. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால் சாலைகளைச் சரிசெய்ய வேண்டும். அதில் குன்றுகள் இருத்தலாகாது. போக்குவரத்து ஒழுங்கு காப்பாற்றப் படவேண்டும். இங்கே சாலை போடுவது நெடுஞ்சாலைத்துறை என்றால் அதில் மின்சாரக் கம்பங்கள் போடுவது மின்வாரியத்துறை. சாலையைப் பராமரிப்பது இன்னொரு துறை. எனவே ஒருங்கிணைப்பும் அக்கறையும் இருப்பதில்லை. அதனால்தான் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் இறக்கின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் முதல் உலக யுத்தத்தில் கூட இறக்கவில்லை. சுனாமியில் கூட 9 ஆயிரம் பேர்தான் இறந்தனர். ஆனால் சாலை விபத்தில் 10 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் இறக்கிறார்கள். 40 ஆயிரம் பேர் கை, கால்களை இழந்து முடமாகிறார்கள்.
“திருமணமாகி ஒரு வாரமேயான மணப்பெண் கணவனை இழப்பது, ஒரே பையனை வைத்துள்ள பெற்றோர் தன் வாரிசை இழப்பது, குழந்தை மட்டும் இருந்து பெற்றோர்களை இழந்து குழந்தை தவிப்பது எல்லாமே தினம் தினம் கண்டு மனம் நொந்துபோன மருத்துவர் நான். பார்த்துப் பார்த்து மனம் புழுங்குவதை விட இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றே 18 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் சென்றேன் . நீதியரசர்கள் முன் இந்த விஷயத்தை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த விபத்துக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் செய்துள்ளது. அடுத்தது உறுதிப்பாடான ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று டாக்டர் ராஜசேகரன் எமது நிருபர் கா. சு. வேலாயுதத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.)
-------------------------
*********
எழுத்து தவறுகளை மன்னிக்கவும்
****
Subscribe to:
Posts (Atom)