Monday, November 01, 2010

மழையே ..மழையே ..மீண்டு(ம்) வா ..!
-------------------------------------------

மழை பெய்யும் இரவு இன்று,
மழை பற்றியான ஏக்கம்
மனதிற்குள் எப்போதும் ...
ஒரிசாவிலும் ,ஆந்திராவிலும்,
புயல் மழை என்றாலும்,
ஏனோ.. வருத்தம் வருவது குறைவுதான் !

சாக்கடை நதியில் நகரத்தில் பயணித்தாலும்.
நல்லமழைக்கான ஏக்கம்
எங்கள் மக்களுக்கு என்றுமே...
புயலைக் கூட மகிழ்ச்சியுடன் சந்திக்க மனமிருக்கிறது
மழையுடன் வருவதால் .
காய்ந்து போன நிலதுக்காரர்களுக்கு
வெள்ளம் புயலின் வீரியம் புரிவதில்லைதான் ,,,