Tuesday, June 19, 2012

அஜித் வைஷ்ணவி திருமணம்





   



               அஜித் வைஷ்ணவி திருமணம்
              ------------------------------------

     நம் தேசத்தில் வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்று இரண்டு விஷயங்களை வாழ்க்கையில் கடினமான பணி என்று  குறிப்பிடுவர். அஜித் வைஷ்ணவி திருமணம்.,திருமணத்தை எவ்வளவு எளிமையாக சிக்கனமாக செய்யவேண்டும்மென்பதற்கு எடுத்துக்காட்டாக 01.06.12 அன்று நடைபெற்றது. அஜித் எனது நெருக்கிய நண்பர் சஹஸ்ரநாமத்தின் மகன். என்வே அஜித்தை எனக்கு பள்ளி நாட்களிலிருந்தே நண்கு தொ¢யும்.  பழகுவதற்கு இனிய பிள்ளையாயிருந்து வ்ள்ர்ந்து இளைஞ்ராகி இன்று அறிவியல், சோசலிஷம்,அரசியல் என பல விஷ்யங்களில் வி¡¢வான விவாதம் செய்யுமளவிற்கு வாசிப்பு உள்ளவர் .அஜித் தற்போது  ஜெர்மனியில் பிரைபர்க் யுனிவர்சிட்டியில் PHDபயின்று கொண்டே பனியாற்றி வருகிறார்.    கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அஜித் தனது விருப்பத்திற்கு¡¢ய துணைவி வைஷ்ணவியை திருமணம் செய்வதாக அறிவிந்தது, பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றது என்ற விஷயங்களோடு நில்லாமல், தனது கொள்கையின் அடிப்படையில் மாலை, தாலி, விருந்து, ஆடம்பரமற்ற திருமணமாக தனது திருமணம் இருக்க வேண்டும்மென்பதில் உருதியாக இருந்ததும் வைஷ்ணவி வீட்டாரையும் திறம்பட பேசி சம்மதிக்க  வைத்ததும், எங்கள் நட்பு வட்டாரத்தில் ஆச்சர்யமாக அலசப்பட்ட விஷயமாக இருந்தது. . திருமணம் என்ற பெயா¢ல் நடைபெறும்(ஆடம்பர)செலவுகளின் போ¢ல் சஹஸிற்கும் அவர் துணைவியார் சசிகலாவிற்கும் எப்போதும் உடன்பாடில்லை.  அவர்களுடைய திருமணம் கூட இருவரும் விரும்பி மணந்துகொண்ட காதல் திருமணம்தான். பத்தாண்டுகளுக்கு முன்பே சஹஸ¤ம், அஜித்தும் விளையாட்டாக சொன்னது நினைவிற்கு வந்தது- "பொ¢ய விருந்து கிடையாது, ஆடம்பரமற்ற திருமணம், ம்று நாளில் திருமணம் முடிந்தது என்று தீக்கதி¡¢ல் அறிவிப்பு "என்ற முடிவு, காலத்தை வென்று  கனவாக இருந்தது, இன்று நினைவாகியது என்று குறிப்பிட்டால் மிகையில்லை. பொ¢ய விருந்து, ஆடம்பர திருமணம் என்று  தங்களது பல வருட சேமிப்புகளை காலிசெய்து விட்டு, கடன் பல வாங்குபவர்கள் திருந்த நல்ல உதாரணம் வேண்டுமே. அவர்களுக்கு அஜித் திருமணம் நிச்சியமாக ஒரு உதாரனமே.

     அஜித், திருமணத்திற்கு  அழைப்பிதழ் அடித்து யாரையும் அழைக்கவி¢ல்லை, மிகக்குறைந்த அளவில் ,  சில நண்பர்கள்,அண்டை வீட்டார் ,என அழைதிதிருந்தனர். திருமணத்திற்கு வந்த இருபது பேரும் தமிழ்ச்சங்க செயலாளர் க.வை.தலைமையில் திருமணம் நடைபெற்றதை பார்க்க வந்துள்ள பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.  திருமண அறிவிப்பிற்கு பிறகு நேராக திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகம் சென்றோம். (சோதிட) நேரம், காலம் பார்க்கவில்லையாதாலால் ,அங்கு நல்ல நேரத்தில் மட்டும் குவியும் கூட்டமுமில்லை.,அப்பொழுதில் பதிவு செய்ய வந்த ஒரே தம்பதியினர் அஜித்-வைஷ்ணவி மட்டுமே. அலுவலகத்தில் ஒரு மணிநேரத்தில் பதிவு செய்து அனுப்பிவிட்டார்கள். சார்பதிவாளர் அலுவலகத்தில் சம்திங் சம்திங் எதுமில்லை . கேட்டால் நானே மறியல் செய்வேன் என்று சொல்லி வந்த மாப்பிள்ளை அஜித்துக்கு நல்ல வேலை அங்கு யாரும் வேலை வைக்கவில்லை.வந்திருந்தவர்கள் அன்னபூரானா ஹோட்டலில் மதிய உணவருந்த இனிதே முடிவுற்றது.  காலை 30 பேர், மதியம் 50 பேர் சாப்பிட்ட இந்த விருத்துக்கான செலவை நீங்களே கூட்டிக்கழித்துப்பாருங்கள், பிறந்த நாள் விழாவைவிட குறைவாக வரும்.
இனி நாமும் நம் குடும்பத்திலும் இது போன்ற சிக்கனத்திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று, வழிகாட்டிய அஜித்திற்கும்-வைஷ்ணவிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வேமே.

thanks-saalram.